»   »  நயனாவின் கிளாமர் கலக்கல்

நயனாவின் கிளாமர் கலக்கல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தெலுங்கில் நயனாரா படு கிளாமராக நடித்துள்ள பாஸ் என்ற படம் போஸ் ஐ லவ் யூ என்ற பெயரில் தமிழுக்கு ரீமேக் ஆகி வருகிறது.

வல்லவன் படத்துக்குப் பின்னர் தெலுங்குக்குத் தாவினார் நயனதாரா. சிம்புவால் பிரச்சினை வருமோ என்று பயந்த நயனதாரா தெலுங்கில் தீவிர கவனம் செலுத்த முடிவு செய்தார்.

இதையடுத்து தெலுங்கில் பாஸ் என்ற படத்தில் நடித்தார். இதில் படு கிளாமராக நடித்துள்ளார் நயனதாரா. இது அவரது முதல் தெலுங்குப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் படம் என்பதாலும், தெலுங்குப் படம் என்பதாலும், ரசிகர்களைக் கவர கடுமையான கவர்ச்சி காட்டி நடித்திருந்த இந்தப் படம் இப்போது தமிழுக்கு சொல்லத்தான் நினைக்கிறேன் என்ற பெயரில் வரவுள்ளது.

நயனதாராவுக்கு ஜோடியாக நடித்துள்ளவர் நாகார்ஜூனா. நயனதாராவின் கிளாமர் கலக்கலால் படம் ஓரளவுக்கு வெற்றிகரமாக ஓடியது. இதையடுத்து சில படங்களில் புக் ஆகி நடிக்க ஆரம்பித்தார் நயனதாரா.

இந்தப் படத்தில் நயனதாரா தவிர ஷ்ரியாவும் வில்லங்கமாக கவர்ச்சி காட்டி கலக்கியுள்ளார். இவர்கள் தவிர பூனமும் இருக்கிறார். இவர் கவர்ச்சிக்குப் புது மொழி கொடுத்து தெலுங்கு ரசிகர்களை உலுக்கி வருபவர்.

இப்படி மூன்று தேவியரின் முத்தான கிளாமரில் உருவான போஸ் ஐ லவ் யூ படம் தமிழுக்கு வருவதால் தமிழ் ரசிகர்களும் இந்த முப்பாத்தாக்களின் கவர்ச்சி மழையில் நனையும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

நம்ம ஊர் நாசர், கன்னடத்து சுமலதாவும் படத்தில் உள்ளனர். விரைவில் சொல்லத்தான் நினைக்கிறேன் தமிழில் வெளியாகி ரசிகர்களை குஜால்படுத்த உள்ளதாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil