கிளாமரும் நயனதாராவும்

By Staff

யாரடி நீ மோகினி படத்தில் தனுஷுடன் கிளாமராக ஆட முடியாது என நயனதாரா மறுத்து விட்டாராம்.

வல்லவன் படத்தில் நடித்து, அப்போது சிம்புவுடன் காதலில் விழுந்து, அது முறிந்து, கொஞ்ச காலம் சென்னையை விட்டு தலைமறைவான நயனதாரா சிறிய இடைவெளிக்குப் பின்னர் தனுஷுடன் ஜோடி சேர்ந்து யாரடி நீ மோகினி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

கஸ்தூரிராஜாதான் படத்தைத் தயாரிக்கிறார். செல்வராகவனின் கதைதான் யாரடி நீ மோகினி. இப்படத்தை ஏற்கனவே தெலுங்கில் திரிஷாவை வைத்து ஹிட் ஆக்கியுள்ளார் செல்வா. அவரது உதவியாளர்தான் யாரடி நீ மோகினியை இயக்கி வருகிறார்.

முதல் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. தற்போது பாங்காக்கில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

பாடல் காட்சிகளையும், பிற காட்சிகளையும் அங்கு வைத்து சுட்டு வருகின்றனர். ஒரு பாடலில், கூடுதல் கிளாமராக நடிக்க வேண்டும், கவர்ச்சியான காஸ்ட்யூம் போட வேண்டும் என கூறியுள்ளனராம்.

குறிப்பாக வல்லவனில் காட்டியதுபோலவே இதிலும் தித்திப்பான கவர்ச்சி காட்ட வேண்டும் என்று இயக்குநர் கூறவே, முடியவே முடியாது என்று கூறி விட்டாராம் நயனதாரா. பலமுறை வலியுறுத்தியும் அவர் பிடிவாதமாக மறுக்கவே, சரி என்று விட்டு விட்டனர்.

இப்போது அந்தப் பாடலுக்கு நயனதாராவுக்குப் பதில் ரகஸ்யாவை ஆட வைத்துள்ளனராம்.

இந்தப் படம் என்றில்லை, இனிமேல் கிளாமர் காட்டவே மாட்டேன் என்று கூறி வருகிறாராம் நயனதாரா.

ஆனால், தெலுங்கில் மட்டும் கிளாமரில் பின்னி எடுத்து வருகிறார்.

எந்த ஊர் நியாயமோ

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X