»   »  மலையாளத்தில் நயனதாரா

மலையாளத்தில் நயனதாரா

Subscribe to Oneindia Tamil
தமிழைக் கலக்கிவிட்டு, தெலுங்கில் கலக்கி வரும் நயனதாரா இப்போது தாயகமானமலையாளத்திற்குத் திரும்பியுள்ளார்.

ஐயாவில் அறிமுகமான நயனதாராவைப் பார்த்து இந்தப் பூனையும் பீர் குடிக்குமா..ஸாரி பால் குடிக்குமா என்று கேட்காத குறையாக படு பாந்தமாக அப்படத்தில் வந்துபோனார்.

அடுத்த படமே ரஜினியுடன் என்றதால், நயனதாராவுக்கு மார்க்கெட் படு வேகமாகசூடு பிடித்தது.

இந்த இரு படங்களுக்குப் பிறகு நயனதாரா கிளாமரில் குதித்தார். விஜய்யுடன்குத்தாட்டம், மற்ற படங்களில் குதியாட்டம் என படு ஜோராக போய்க் கொண்டிருந்தநயனதாராவின் வாழ்க்கையில் குறுக்கால புகுந்து நயனாவின் மனதை ரோஜாவால்ஒரே போடாக போட்டு லவ்வ ஆரம்பித்தார் மன்மதராசா சிம்பு.

இப்போது நயனதாராவின் கையில் தமிழில் அதிக படங்கள் இல்லை. மாறாக அவரதுஇதயம் பூராவும் சிம்புதான். தமிழில் ஒரு ரவுண்டு முடித்து விட்ட நயனதாராஇப்போது தெலுங்கிலும் கலக்க ஆரம்பித்துள்ளார்.

லட்சுமி என்ற அவரது முதல் தெலுங்குப் படம் சுமாராக போனாலும் கூட,நயனதாராவுக்கு அங்கு மிக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தெலுங்கில் பெரிய ரவுண்டு அடிக்கத் தயாராகிக் கொண்டிருக்கும் நயனதாராவுக்குபடங்களை செலக்ட் செய்வதில் சிம்புதான் ரொம்ப உதவியாக இருக்கிறாராம்.

இப்போது மலையாளத்திலும் ஒரு படத்தில் நடிக்கப் போகிறார் நயனதாரா.மலையாளத்திலிருந்து வந்திருந்தாலும் கூட அங்கு நயனதாரா நடித்த படங்கள்ரொம்பக் குறைச்சல். இயக்குனர் ஜோஷியின் புதிய படத்தில் நயனதாராநடிக்கவுள்ளார்.

இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கவிருப்பது மம்தா மோகன்தாஸ் புகழ் சுரேஷ்கோபி.

ஜோஷியும், சுரேஷ்கோபியும் சேர்ந்து செய்த படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளதால்இந்தப் படமும் பெரும் வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் நயனதாரா நடித்தாலும் கூட அவருக்கு ஹீரோயின் வேடம் இல்லையாம்.உண்மையில் ஹீரோயினாக நடிப்பது கோபிகா. கூடவே சம்விருதாவும் இருக்கிறார்.அப்புறம் கார்த்திகாவும் உடன் இருக்கிறார்.

நயனதாராவை கிளாமரான ரோலில் காட்டப் போகிறாராம் ஜோஷி. இதை முன்பேஅவரிடம் சொல்லித்தான் புக் செய்துள்ளாராம் ஜோஷி. இத்தனை நாயகிகளைப்போட்டு படம் எடுப்பதால் படத்தில் கிளாமருக்கு பஞ்சம் இருக்காது என்கிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil