»   »  பாரபட்ச நயனதாரா!

பாரபட்ச நயனதாரா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் தொலைக்காட்சிகளுக்குப் பேட்டி கொடுக்க பெரும் பந்தா செய்து வந்தநயனதாரா மலையாள டிவிக்களுக்கு மட்டும் தனது கொள்கையை விளக்கி படுதாராளமாக பேட்டி கொடுத்து வருகிறார்.

நடிக்க வந்தது முதல் இப்போது வரை நயனதாரா சில விஷயங்களை படுஸ்டிரிக்ட்டாக கடைப்பிடித்து வருகிறார். அது விளம்பரப் படங்களில் நடிப்பதில்லை,டிவிகளுக்கு பேட்டி கொடுப்பதில்லை என்பது தான்.

இதில் முதல் கொள்கையிலிருந்து இன்னும் விலகாமல் படு உறுதியாக இருக்கிறார்.ஆரம்பத்தில் சில தொலைக்காட்சிப் பேட்டிகளை கொடுத்தவர் அப்புறம்கொடுப்பதில்லை. இப்போது சுத்தமாக தமிழ் டிவிகளில் நயனதாராவின் பேட்டியைபார்க்க முடிவதில்லை. அந்த அளவுக்கு சுத்த மூடியாக மாறி விட்டார்.


ஆனால் சமீபகாலமாக தனது சொந்த ஊரான மலையாள சினிமா மீது நயனதாராவின்பார்வை அதிகமாக படிந்துள்ளது. தமிழை விட மலையாளத்தில் நிறைய நடிக்கஆர்வம் காட்டுகிறார். அதேபோல மலையாள டிவிக்களுக்கு விழுந்து விழுந்து பேட்டிகொடுத்து வருகிறார்.

எந்த சேனலைப் போட்டாலும் நயனதாராவின் பேட்டி தான். மலையாளத்திலிருந்துதமிழுக்கும், தெலுங்குக்கும் போன பல நடிகைகள் (சம்பாதித்து முடித்துவிட்டு)இப்போது மீண்டும் மலையாளத்துக்கே திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். அந்தவரிசையில், நயனதாராவும் சேர்ந்துள்ளார்.

மலையாள டிவிகளுக்கு அளிக்கும் பேட்டியின் போது சிம்புவுக்கும் தனக்கும் ஒன்றும்இல்லை என்று கூறுகிறார் நயனதாரா.

ஆனால் நிஜத்தில் சிம்புவைக் கேட்காமல் புதுப்படம் எதையும் அவர் ஒத்துக்கொள்வதில்லை என்கிறார்கள். இன்னும் எத்தனை நாளுக்குத் தான் இந்த கண்ணாமூச்சியோ..

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil