»   »  நயனதாராவின் கடைசி முத்தம்!

நயனதாராவின் கடைசி முத்தம்!

Subscribe to Oneindia Tamil

நயனதாரா இனிமேல் முத்தக் காட்சிகளில் நடிக்க மாட்டாராம். வல்லவன் தான் முதலும், கடைசியுமாம்.

நயனதாரா இப்படிக் குண்டைத் தூக்கிப் போடுவதற்கு காரணம் இல்லாமல் இல்லை. வல்லவனில் சிம்புவும்,நயனதாராவும் கொடுத்துக் கொண்ட கவ்வு முத்தம் அந்த ஸ்டில்கள் வெளியானதிலிருந்தே பெரும் பரபரப்பைஏற்படுத்தி விட்டன.

இந்த கவ்வுக்குப் பின்னர் தான் சிம்புவும், நயனதாராவும் காதலுக்கு தவ்வினர். வல்லவனில் ரீமாவுக்குப்போட்டியாக நயனதாராவையும் படு கிளாமராக காட்டியுள்ளார் சிம்பு.

சிம்புவுக்கு துணிச்சலாக உம்மா கொடுத்தது குறித்து நயனதாரா வருத்தப்படவில்லை. ஆனால் இனிமேல்இதுபோல முத்தம் கொடுக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று கூறுகிறார்.

வல்லவன் படத்தில் நான் சந்தோஷமாக நடித்தேன். அதில் கவலை, மகிழ்ச்சி, கிளாமர் என எல்லாமே கலவையாகஇருந்தது. இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பைக் கொடுத்ததற்காக சிம்புவுக்குத் தான் தேங்க்ஸ் சொல்ல வேண்டும்.

இதில் நான் வித்தியாமான பரிமாணத்தில் நடித்திருந்தும் கூட எல்லோரும் முத்தக் காட்சி குறித்தும், படுக்கையறைகாட்சி குறித்தும் தான் பேசுகிறார்கள்.

முத்தக் காட்சியில் நடிக்க நான் வெட்கப்படவில்லை. காரணம் அந்தக் காட்சி குறித்து முதலிலேயே என்னிடம்விளக்கமாக தெரிவித்தனர்.

முத்தக் காட்சி மிகவும் அவசியம் என்று வலியுறுத்தியதால் தான் அதற்கு சம்மதித்தேன். அப்புறம் தான் அந்தஸ்டில் எடுக்கப்பட்டது.

அதேபோலத் தான் மற்ற காட்சிகளிலும் நான் நடித்தேன். சிம்பு மீது இருந்த நம்பிக்கையால் தான் இப்படிநடித்தேன். இதற்காக வருத்தப்படவில்லை. அதற்கான அவசியம் இல்லை.

இருந்தாலும் எல்லோரும் இதை சீரியஸாக பேசி வருவதால் இனிமேல் இதுபோன்ற முத்தக் காட்சிகளில் நடிக்கமாட்டேன். வல்லவன் தான் நான் முதலும், கடைசியுமாக நடித்த முத்தக் காட்சி படம். போதும்டா சாமி என்றுகும்பிடு போடுகிறார் நயன்.

நயனதாராவுக்கு இந்த தீபாவளி படு விசேஷமாக தீபாவளியாம். காரணம் அவர் நடித்த 3 படங்கள் ரிலீஸ் ஆனதுதான். ஜீவாவுடன் ஈ, சிம்புவுடன் வல்லவன், சரத்குமாருடன் தலைமகன் ஆகிய மூன்றிலுமே தனக்குவித்தியாசமான வேடம் என்று சந்தோஷமாக கூறுகிறார் நயனதாரா.

சிவாஜி படத்தில் ரஜினியுடன் குத்துப் பாட்டுக்கு ஆடுவது குறித்தும் திரில்லிங்காக உள்ளார் நயன்ஸ். சமீபத்தில்இந்தப் பாட்டை புனேவில் வைத்து இயக்குநர் ஷங்கர் சுட்டு முடித்துள்ளாராம்.

நயன் காட்டில் மீண்டும் கன மழைங்கோ!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil