மீண்டும் மலையாளத்தில் நயனதாரா!

மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்து, பின்னர் இங்கிருந்து தெலுங்குக்கும் போன நயனதாரா மலையாளப் படங்களில் தொடர்ந்து நடிக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில், மலையாள திரைப்பட நடிகர் சங்கமான அம்மா தயாரிக்கவுள்ள டுவென்டி 20 என்ற படத்தில் நயனதாரா நடிக்கவுள்ளார்.
இந்தப் படத்தில் பிருத்விராஜுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தில் மலையாளத் திரையுலகின் அத்தனை முன்னணி நடிகர், நடிகையரும் நடிக்கிறார்கள் என்பது நினைவிருக்கலாம்.
படத்தில் இடம் பெறும் பாடல் காட்சியில், பிருத்விராஜுடன், நயனதாரா இணைந்து பாடுகிறார். இந்தப் பாடல் காட்சியை சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் வைத்து நான்கு நாட்கள் படமாக்கவுள்ளனர். டான்ஸ் மாஸ்டர் பிருந்தாதான் இந்தப் பாடலுக்கு நடன வடிவமைப்பை மேற்கொள்கிறார்.
ஜோஷி இயக்கத்தில் உருவாகும் இப்படம், இந்த கோடைக்கு திரைக்கு வருகிறது.
Comments


Click it and Unblock the Notifications