»   »  பேரரசு அழைப்பு; நயன் ஓட்டம்!

பேரரசு அழைப்பு; நயன் ஓட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
விஜயகாந்த்துக்கு ஜோடியாக தர்மபுரி படத்தில் நடிக்க வருமாறு இயக்குநர் பேரரசுவிடுத்த அழைப்பை நிராகரித்து விட்டாராம் நயனதாரா.

சிம்புவுடன் தீவிர நட்பில் மூழ்கி விட்ட நயனதாரா தனது கேரியரை இழக்கும்அளவுக்கு படு மெத்தனமாக இருந்து வருகிறாராம். தெலுங்கில் அவர் நடித்த முதல்படம் ஹிட் ஆகியும் கூட புதிதாக எந்தப் படத்திலும் புக் ஆகவில்லையாம் நயனதாரா.

படங்கள் வந்தும் கூட அதை ஒப்புக் கொள்வதில் அவர் அதிக ஆர்வம் காட்டாமல்,இழுத்தடிப்பதால் அவரை விட்டு விட்டு வேறு நாயகிகளைத் தேட ஆரம்பித்துவிட்டார்களாம் தெலுங்குப் படத் தயாரிப்பாளர்கள்.

இதேபோல சமீபத்தில் மலையாளத்தில் அவர் நடிக்க ஒப்புக் கொண்ட ஜென்மம்படத்திலும் கூட ஒப்புக் கொண்டபடி பாடல் காட்சியில் நடிக்காமல் தகராறு செய்துகொண்டு ஊருக்கு ஓடி விட்டார். இதனால் கடுப்பாகிப் போன தயாரிப்பாளர்இப்போது சதாவை போட முயற்சித்து வருகிறார்.

தமிழிலும் நயனதாரா கையில் புதுப் படம் எதுவும் இல்லை. வல்லவன் படத்திலும்,சரத்குமாருடன் தலைமகன் படத்திலும் மட்டும்தான் நடித்து வருகிறார். இந்தநிலையில் இயக்குநர் பேரரசு, நயனதாராவை அணுகியுள்ளார்.

கேப்டன் விஜயகாந்த் நடிக்கும் தர்மபுரியில் நீங்கள் அவருக்கு ஜோடியாக நடிக்கவேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் அதை ஏற்க மறுத்து விட்டாராம் நயனதாரா.

விஜயகாந்த் இப்போது வெறும் நடிகர் மட்டுமல்ல, ஒரு அரசியல் கட்சியின் தலைவர்.தேமுதிக பார்டர் போட்ட சேலையைக் கட்டிக் கொண்டு ஆட விட்டு விட்டால் என்னசெய்வது என்ற பயத்தில்தான் அந்த வாய்ப்பை வேண்டாம் என்று கூறி விட்டாராம்நயனதாரா.

இப்போது சினேகாவை கேட்டுள்ளார்களாம். அவரும் சரி என்று கூறியிருப்பதாககோலிவுட்டில் டாக் நிலவுகிறது. சிம்புவின் அப்பா டி.ஆர். தேர்தலில்போட்டியிட்டபோது அவருக்கு ஆதரவாக சிம்பு பிரசாரம் செய்தார்.

கூட வருமாறு சிம்பு கேட்டபோது கூட நமக்கு வேண்டாம்ப்பா அரசியல் என்றுபெரிய கும்பிடாக போட்டு சிம்புவை மட்டும் அனுப்பி வைத்தார் நயனதாரா.

அரசியலே வேண்டாம் என்றால் அதிமுகவில் ஐக்கியமாகியுள்ள சரத்குமாருடன்மட்டும் தலைமகனில் நடிப்பது எப்படி என்று சில குசும்பர்கள் கேள்வி கேட்கிறார்கள்.

நயனதாரா முடியாதுன்னு சொன்னா, நாம என்னப்பா பண்ண முடியும்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil