பொன்னியின்செல்வன் மகாராணி போல மாறிய நயன்தாரா..மாஸ்டர் பிளான் தான் போங்க!

சென்னை : தனிஷ்க் நிறுவனத்தின் விளம்பரத்திற்காக நடிகை நயன்தாரா மகாராணி போல அட்டகாசமான கெட்டப்பில் போஸ் கொடுத்துள்ளார்.

கோலிவுட்டின் மிகவும் விரும்பப்படும் ஜோடியான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்து முடிந்தது.

தற்போழுது இவர்கள் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனியாவில் இரண்டாவது ஹனிமூனை குதூகலமாக கொண்டாடி வருகின்றனர்.

மகாராணி

மகாராணி

நயன்தாரா சோழ நாட்டு பாரம்பரியத்தை போற்றும் வகையில், மகாராணி போல உடை அணிந்து தனிஷ்க் நகைக்கடை விளம்பரத்திற்கு அம்சமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த விளம்பரத்திற்காக பிரசாத் ஸ்டுடியோவில் பண்டையகால பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையில் பிரம்மாண்ட செட் போடப்பட்டுள்ளது.

விளம்பரத்திற்காக

விளம்பரத்திற்காக

தனிஷ்க் நகைக்கடை விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. இந்த விளம்பரம் தீபாவளி திருநாளை முன்னிட்டு இந்த மாத கடைசியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொன்னியின் செல்வன் படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்ப்பு அதிகரித்துள்ளதால், இந்த சோழா கன்செஃப்ட் பக்காவாக இருக்கும் என்று, தனிஷ்க் நிறுவனத்திற்கு நயன்தாரா கொடுத்த ஐடியா தான் இது என சில சினிமா ஆர்வலர்கள் பேசி வருகிறார்கள்.

பெரிய ரீச் கிடைக்கும்

பெரிய ரீச் கிடைக்கும்

பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கவில்லை என்றால் என்ன, நானும் போடுவேன் ராணி கெட்டப் என விளம்பரத்திற்காக மொத்தமும் ராணியாகவே மாறியுள்ளார் நயன்தாரா. பொன்னியின் செல்வன் முதல் பாகம் வரும் 30ந் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடலுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளதால், இந்த விளம்பரத்திற்கும் பெரிய ரீச் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

படுபிஸி

படுபிஸி

நயன்தாரா தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் கன்னேக்ட், இறைவன், லேடி சூப்பர் ஸ்டார் 75 போன்ற படங்களை கையில் வைத்துள்ளார். இதில், கோல்ட் திரைப்படம் ஓணம் பண்டிகைக்கு வெளியாக இருந்த நிலையில் படம் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. அதேபோல காட்பாதர் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X