»   »  அத்தையை வளைத்த நயன்!

அத்தையை வளைத்த நயன்!

Subscribe to Oneindia Tamil

கோலிவுட்டின் அடுத்த ஸ்டார் திருமணம் சிம்பு-நயனதாரா என்று பேச்சுகிளம்பியுள்ளது.

ஹீரோவும், ஹீரோயினும் படத்தில் காதலிப்பார்கள், சின்னச் சின்னதாக சண்டைவரும், எல்லாவற்றையும் சமாளித்து விட்டு சுபமாக கை பிடிப்பார்கள். ஆனால்நிஜத்தில் மேட்டரே வேறு. சாதாரண காதலர்களைப் போலவே, நடிகர், நடிகைகளும்நிஜக் காதலில் பல்வேறு சிக்கல்களை சந்திக்கத்தான் செய்கிறார்கள்.

அதையும் மீறி ஒரு சிலர் தான் மணவறை வறை போகிறார்கள்.பெரும்பாலானவர்களின் காதல் ஹோட்டல் அறையோடு முடிந்து போகிறது.கோலிவுட்டின் இப்போதைய கவனம் முழுக்க ஜோ-சூர்யா கல்யாணத்தின் மீது தான்பதிந்திருக்கிறது.

இப்போது அடுத்த கல்யாணம் யாருக்கு என்பது குறித்து புதிய செய்தி கசியஆரம்பித்திள்ளது. சிலுப்பல் சிம்புவும், கலக்கல் நயனதாராவும் அடுத்த ஸ்டார்கல்யாண ஜோடி என்று அடித்து சொல்ல ஆரம்பித்துள்ளனர்.சிம்பு-நயனதாரா காதலைப் பொறுத்தவரை நயனதாரா சைடு ஓ.கே. சொல்லி விட்டது.

ஆனால் சிம்பு பக்கம் தான் சிக்கலே. தாடி டாடியை ஈசியாக சமாளித்து விட்டார்சிம்பு. தம்பி குறளும், தங்கச்சி இலக்கியாவும், நயனை அண்ணி என்றே கூப்பிட்டுவருகிறார்களாம். ஆனால் அம்மா உஷா வைத்தான் அவரால் சமாதானப்படுத்தவேமுடியலையாம்.

இதனால்தான் இவர்களது திருமணம் இழுத்துக் கொண்டே போகிறதாம்.என்னென்னவோ செய்து பார்த்தும் உஷாம்மா அசையவே மாட்டேன் என்கிறாராம்.இதனால் புது ரூட்டில் நூல் விட்டுப் பார்த்தார் சிம்பு.நயனதாராவைக் கூப்பிட்ட சிம்பு, என்ன செய்வியோ, ஏது செய்வியோ, அம்மாவைவழிக்கு கொண்டு வரவேண்டியது என்று கூறி விட்டு எஸ்கேப் ஆகி விட்டார்.

இதை ஏற்ற நயனதாரா வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உஷாவை சந்தித்துநைச்சியமாக பேசி அவரது மனதுக்குள் புகும் முயற்சியில் ஈடுட்டாராம். சமீபத்தில்உஷாவை சந்தித்த நயனதாரா, ஆண்ட்டி, உங்களுக்காக இந்த நெக்லஸை வாங்கிவந்தேன் என்று கூறி ரூ. 2 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸை வருங்காலஅத்தையின் கையில் திணித்தாராம்.

அதை வாங்கிய உஷா நெகிழ்ந்து விட்டாராம். என்னே அன்பு என்று டி.ராஜேந்தரிடம்சொல்லி சொல்லி பெருமைப்பட்டுப் போனாராம். இதை வைத்துப் பார்த்தால்விரைவிலேயே பச்சைக் கொடி காட்டி விடுவார் உஷா என்கிறது சிம்புவுக்குநெருங்கிய வட்டாராம்.

உஷா-ராஜேந்தர் கெட்டிமேளமே காதலில் ஒலித்தது தானே, மகனுக்கு மட்டும் மறுப்புசொல்லி விடுவாரா என்ன!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil