»   »  சிவாஜியில் நயனதாரா!

சிவாஜியில் நயனதாரா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
சந்திரமுகிக்குப் பின்னர் ரஜினியுடன் மீண்டும் நயனதாரா சேர்கிறார். சிவாஜியில் ரஜினியுடன் ஒரு பாட்டுக்குடான்ஸ் ஆடுகிறார்.

ஐயா படத்தில் நயனதாரா அறிமுகமாகியபோது யார் இந்த அழகுப் பூனை என்று எல்லோரையும விழி விரியவைத்தார். ஆனால் சந்திரமுகியில்தான் ஸ்டார் நடிகையாக உயர்ந்தார்.

2வது படத்திலேயே சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர்ந்ததால் நயனதாராவுக்கு மார்க்கெட் படு வேகமாகஉச்சத்திற்குப் போனது. அதன் பிறகு குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையானார்.ஆனால் அதன் பிறகு மந்தமாகவே அவரது வேகம் இருந்தது.

பெரிய ரவுண்டு அடிப்பார் என நினைத்தவர்களுக்கு ஏமாற்றம் தரும் வகையில் படு நிதானமாக படங்களில்நடித்து வருகிறார் நயனதாரா. இப்போது நயனதாராவுக்கு சந்தோஷமான ஒரு அழைப்பு வந்துள்ளதாம். அது,சிவாஜியில் ரஜினியுடன் ஒரு பாடலுக்கு ஆடும் வாய்ப்பு.

சிவாஜி படத்தின் முதல் காட்சியே பாடல்தானாம். அந்தப் பாட்டுக்கு ரஜினியுடன் சேர்ந்து பிரபல நடிகைஒருவரை ஆட வைக்க தீர்மானிக்கப்பட்டது. பல பெயர்களைப் பரிசீலித்து கடைசியாக நயனதாராவை முடிவுசெய்தார்களாம். உடனடியாக நயனதாரவை அணுகி சம்மதம் கேட்க, அவரும் ஓ.கே. என்று சொல்லி விட்டாராம்.

இந்தப் பாடல் காட்சியை விரைவில் படமாக்க உள்ளனராம். ரஜினியுடன் சேர்ந்து டான்ஸ் ஆடப் போவதால்நயனதாரா சந்தோஷமாக உள்ளாராம். சந்திரமுகிக்குப் பிறகு தனக்கு மார்க்கெட் சூடு பிடித்தது போல இந்தப்பாடல் மூலம் மீண்டும் படு சூடாகும் என நம்புகிறார் நயன்ஸ்.

ஸோ, ஷ்ரேயாதான் ஹீரோயினாக இருந்தாலும், நயனதாராதான் படத்தை தொடங்கி வைக்கப் போகிறார்.

ஜமாய்ங்கோ!

Read more about: nayantara in shivaji

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil