நயன்தாரா நடிக்க வந்து 10 வருஷம் ஓடிப்போச்சு…
நயன்தாரா சினிமாவில் நடிக்க வந்து 10 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.
அறிமுகமான நேரத்தை விட இப்போதுதான் நயன்தாராவின் கால்ஷீட் டைரி நிரம்பி வழிகிறதாம்.
அறிமுகமானது மலையாளப்படம் என்றாலும் தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் பிரபலமானவர் நயன்தாரா. தினசரி ஹாட் நியூஸ் ஏதாவது அவரைப்பற்றி வெளியாகிக் கொண்டே இருப்பதுதான் சிறப்பம்சம்.

2003 ல் அறிமுகம்
மனசினக்கரே மலையாளப் படத்தின் மூலம் 2003ம் ஆண்டு அறிமுகமானவர் நயன்தாரா.

தமிழில் 2005
இரண்டு வருடங்கள் கழித்து ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்திற்கு அழைத்து வந்தார் இயக்குநர் ஹரி. இவரின் முதல் ஹீரோ சரத்குமார்.

சூப்பர் ஸ்டார் ஜோடி
அடுத்த ஆண்டிலேயே சந்திரமுகி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியோடு ஜோடி சேர்ந்தார்.

இளம் நடிகர்களுடன்
விஜய், அஜித், சூர்யா, சிம்பு, ஜீவா, தனுஷ், ஆர்யா என தமிழின் முன்னணி நடிகர்கள் அத்தனை பேருடனும் ஜோடியாக நடித்துவிட்டார் நயன்தாரா.

தென்னிந்திய மொழிகளில்...
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளின் நம்பர் ஒன் நாயகியாக வலம் வந்தவர்.

சொந்த வாழ்க்கை சோகம்
சினிமாவில் ஜொலித்த அளவுக்கு, தன்னுடைய சொந்த வாழ்க்கையில் சோபிக்காமல் கோட்டை விட்டார். சிம்பு, பிரபுதேவா, என இவருடைய காதல் வாழ்க்கையைப் பற்றி எழுதாத ஊடகங்களே இல்லை. ஆனாலும் எதுவுமே கைகூடவில்லை.

அடுத்த ரவுண்டு
ஒரு நடிகையைப் பற்றி காதல் கிசுகிசு வந்தாலே அவருக்கு வருகிற சினிமா வாய்ப்புகள் குறைந்து போகும். ஆனால், நயன் விஷயத்தில் மட்டும் இது தலைகீழாகி இருக்கிறது. இப்போதுதான் வாய்ப்புகள் குவிகின்றன.

டைரி ஃபுல்
ஆர்யாவுடன் 'ராஜா ராணி', உதயநிதியுடன் 'இது கதிர்வேலன் காதல்', அஜித்துடன் 'ஆரம்பம்', 'ஜெயம்' ரவிக்கு ஜோடியாக பெயரிடப்படாத ஒரு படம், தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகும் 'அனாமிகா', கோபிசந்த்துக்கு ஜோடியாக 'ஜெய் பாலாஜி' என நயனின் கால்ஷீட் டைரி இன்னும் சில வருடங்களுக்கு நிரம்பி இருக்கிறது.

வெற்றிக்கு காரணம்
நயன்தாரா நடிக்க வந்து 10 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் சொந்த வாழ்க்கையில் சோகத்தை சந்தித்தாலும் அதை கண்டு கொள்ளாமல் மீண்டும் சினிமா உலகில் கவனத்தை திருப்பியுள்ளார். அதுதான் நயனின் வெற்றிக்கு காரணம் என்கின்றனர் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











