நடிப்பு தவிர நயன்தாரா, ஹன்சிகா, அனுஷ்கா எல்லாம் என்ன செய்றாங்க தெரியுமா?

By Mayura Akilan

சினிமாவில் மரத்தை சுற்றி டூயட் பாடும் நாயகிகள்... கவர்ச்சி பதுமைகளாய் உலா வரும் நாயகிகள் பலரும் தாங்கள் சம்பாதித்த பணத்தை பத்திரமாக வேறு தொழில்களில் பயன்படுத்துகின்றனராம்.

முன்பெல்லாம் அம்மா, அப்பா, கார்டியன் கைகளில் கொடுத்துவிட்டு கடைசியில் நடிகைகள் ஏமாந்து நின்றது ஒருபுறம் நடந்துள்ளது.

ஆனால் இன்றைக்கோ பல நாயகிகள் தாங்களின் சம்பளத்தை பாதுகாப்பாக பத்திரமாக முதலீடு செய்துவிடுகின்றனராம். அனுஷ்கா, நயன்தாரா, நமீதா, தேவயாணி என பல நாயகிகள் இதுபோல சைடு பிசினஸ் செய்கின்றனராம்.

பூர்ணிமா பாக்கியராஜ், சரண்யா பொன்வண்ணன், ஹன்சிகா ஆகிய நடிகைகள் தங்களின் கலைத்திறமையை பயன்படுத்தி புடவை அழகு படுத்துதால், ஓவியம் வரைதல் என உபயோகமான முறையில் பொழுதை கழிக்கின்றனராம்.

அனுஷ்கா

அனுஷ்கா

சினிமாவில் சம்பாதித்த பணத்தை நிலத்தில் முதலீடு செய்துள்ளார் அனுஷ்கா. ரியல் எஸ்டேட் பிசினஸ்தான் இப்போதைக்கு அனுஷ்காவிற்கு பிரதானமாம்.

நயன்தாரா

நயன்தாரா

குட்டித் தீவு ஒன்றை வாங்கி அதை டூரிஸ்ட் ஸ்பாட்டாக மாற்றியுள்ளாராம் நயன்தாரா. கொச்சியில் அவர் வாங்கியுள்ள இயற்கை எழில் கொஞ்சும் இந்த தீவு பற்றிதான் இப்போது பரபரப்பான பேச்சாம்.

நமீதா

நமீதா

நமீதாவிற்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லை என்றாலும் சம்பாதித்த பணத்தை கொண்டு நிலத்தை வாங்கி ரியல் எஸ்டேட் பிசினஸ் தொடங்கிவிட்டார்.

விந்தியா

விந்தியா

சினிமா வாய்ப்பு இல்லை என்றாலும் அரசியலில் பரபரப்பாக இருந்தார் விந்தியா. இப்போது நமீதா பாணியில் இவரும் ரியல் எஸ்டேட் பிசினசில் இறங்கிவிட்டாராம்.

தேவயாணி

தேவயாணி

நடிகை தேவயாணி தன் மகள்களின் பெயரில் டப்பிங் தியேட்டர் கட்டியுள்ளாராம். சீரியல் நடிப்போடு இப்போது இதுவும் நல்ல வருமானம் தருகிறதாம்.

புடவை விற்பனை

புடவை விற்பனை

நடிகைகள் பூர்ணிமா பாக்கியராஜ், சுதா சந்திரன் ஆகியோர் புடவை டிசைனிங் செய்து விற்பனை செய்கின்றனராம். நடிகை சரண்யா பொன்வண்ணன் காஸ்டியூம் டிசைனிங் வகுப்பு எடுக்கிறாராம்.

ஓவியர் ஹன்சிகா

ஓவியர் ஹன்சிகா

அழகு நடிகை ஹன்சிகா 20க்கும் மேற்பட்ட குழந்தைகளை தத்து எடுத்து பராமரித்து வருகிறார், அதோடு ஓவியம் வரைந்து கண்காட்சியும் நடத்துகிறார். நடிப்பை என் தொழிலாகவும், ஓவியம் வரைவதை பொழுதுபோக்காகவும் வைத்து இருக்கிறேன் என்கிறார் ஹன்சிகா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X