Don't Miss!
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஆசிரமத்துக்கு வருமாறு நித்தியானந்தா சார்பில் வந்த அழைப்பை ஏற்க மறுத்த நயன்தாரா
பெங்களூர்: ஆசிரமத்திற்கு வருமாறு நித்தியானந்தா சார்பில் விதிக்கப்பட்ட அழைப்பை நடிகை நயன்தாரா ஏற்க மறுத்துள்ளார்.
காதல் பிரச்சினைகளில் சிக்கி அடுத்தடுத்து வாழ்க்கையில் சோகத்தையே சந்தித்து வரும் நயன்தாராவுக்கு மகிழ்ச்சியை உருவாக்க, அவரது வாழ்க்கையின் துக்கங்களை, சந்தோஷமாக மாற்ற, நித்தியானந்தா ஆசிரமம் கருணை கூர்ந்துள்ளது. 'வாருங்கள் சந்தோஷமாக இருக்க வைக்கிறோம்' என்று நித்தியானந்தா ஆசிரமம் சார்பில் நயன்தாராவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாம்.

நித்தியானந்தா ஆசிரமத்தில் யோகா, மூச்சு பயிற்சி, பிராணாயாமம், நடனம் உட்பட வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு தேவையான இன்னும் பல வித்தைகள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. இந்த வித்தைகளை கற்றுக்கொடுத்து நயன்தாராவின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் அழைப்புவிடுத்துள்ளதாம் ஆசிரமம்.
ஆனால் இந்த அழைப்பை ஏற்க நயன்தாரா மறுத்துவிட்டார். இப்போது ஜெயம் ரவி நடிக்கும் தனி ஒருவன், சூர்யாவுடன் மாஸ், நானும் ரவுடிதான், உதயநிதியுடன் நண்பேன்டா ஆகிய திரைப்படங்களில் நயன்தாரா நடத்தி வருகிறார். ஃபுல் பிஸியாக இருக்கும் நயன்தாராவால், ஆசிரமத்திற்கு சென்று பயிற்சி மேற்கொள்ள நேரம் இல்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆசிரமத்துக்கு வர இயலாது என்று நயன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். நித்தியானந்தா ஆசிரமம் சார்பில் பாலிவுட் நடிகை ஸ்வேதா திவாரிக்கும் அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. அவர் அதுகுறித்து என்ன பதில் சொன்னார் என்பது இன்னும் தெரியவில்லை.