»   »  ஏமாந்த நயன்தாரா

ஏமாந்த நயன்தாரா

Subscribe to Oneindia Tamil

தமிழில் பலமாக காலூன்றியுள்ள நயன்தாரா, தெலுங்கிலும் தனது பிடியை இறுக்கி வருகிறாராம். இதனால் இங்கிருந்து சென்றபலருக்கு வயிற்றில் புளியைக் கரைத்து வருகிறது.

மலையாளத்தில் வந்த வரை லாபம் என்று நடித்துக் கொண்டிருந்த நயன்தாரா, கோலிவுட்டுக்கு வந்ததும் வாய்ப்புகளைபிடிப்பதில் தனக்கு நிகர் யாரும் இல்லை என்ற அளவிற்கு வெவரமான ஆளானார்.

ஐயா, சந்திரமுகிக்கு பிறகு எஸ்.ஜே. சூர்யாவுடன் கள்வனின் காதலி, சிம்புவுடன் வல்லவன், சூர்யாவுடன் கஜினி எனகோடம்பாக்கத்தின் முன்னணி புள்ளிகளுடன் ஒப்பந்தமாகியுள்ளார். சம்பந்தப்பட்ட ஹீரோக்களுடன் நேரடியாக பேசி அவர்களைகவிழ்த்து விடுகிறார். இதனால் அவரை தேடி வாய்ப்புகள் வந்து குவிகின்றன.


ஐயாவிலும், சந்திரமுகியிலும் இவருக்கு பெரிய அளவிற்கு பெயர் கிடைக்காவிட்டாலும் இப்படங்களின் மூலம் ரசிகர்களின்மனதில் இடம் பிடித்து விட்டார் என்றே கூற வேண்டும்.

ஐயாவிலும், சந்திரமுகியிலும் அடக்க ஒடுக்கமாக வந்து போன இவர், எஸ்.ஜே. சூர்யாவின் கள்வனின் காதலியில் கவர்ச்சிராஜாங்கமே நடத்தி வருகிறார். வழக்கமாக இயக்குநர் சூர்யாவின் படமென்றாலே அதில் நடிக்கும் நடிகைகளுக்கு எப்படிப்பட்டரோல் இருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

நிலைமை இப்படி இருக்க, கள்வனின் காதலியில் சூர்யாவே அதிர்ச்சியடையும் விதத்தில் நயன்தாரா அபாரமாக ஒத்துழைப்புகொடுத்தாராம்.

இப்படியாக தமிழில் வசமாக காலூன்றியுள்ள நயன்தாரா, மெதுவாக தெலுங்கிலும் இப்போது தனது பிடியை இறுக்கி வருகிறார்.தமிழில் கடைப்பிடித்த அதே பார்முலாவை இங்கும் டெஸ்டிங்கில் விட்டுப் பார்த்தார். அதுவும் ஒர்க் அவுட் ஆனது.

இப்போது அசினுக்கு அடுத்தபடியாக நயன்தாராவை புக் செய்யத் தான் தெலுங்கு தயாரிப்பாளர்கள் கையில் பொட்டியுடன் முட்டிமோதுகிறார்களாம். ஆனாலும் எந்த தயாரிப்பாளர்கள் வந்து கேட்டாலும் தீர விசாரித்தே கால்ஷீட் கொடுக்கிறாராம் இவர்.

இதற்கு காரணம் என்ன தெரியுமா? சந்திரமுகி புக் ஆனவுடன் வரிசையாக சில தயாரிப்பாளர்கள் கால்ஷீட் கேட்டுள்ளார்கள்.இவரும் நம்பி கொடுத்துள்ளார். ஆனால் அதற்குப் பிறகு தான் தெரிந்துள்ளது அவர்கள் அனைவரும் டுபாக்கூர் தயாரிப்பாளர்கள்என்று. இதற்கு பிறகு நயன்தாரா உஷார் பேர்வழி ஆகிவிட்டாராம்.

தெலுங்கில் கூடிய விரைவில் அசின், த்ரிஷாவை இவர் ஓரங்கட்டினாலும் ஆச்சரியப்பட வேண்டாம் என்கிறார்கள் சில விவரம்தெரிந்த புள்ளிகள்.

Read more about: nayanthara enters telugu
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil