»   »  ஆபாசம் இல்லாத க.கா - நயன்தாரா கள்வனின் காதலி படத்தில் நான் அதிக கிளாமர் காட்டி நடித்திருப்பதாக வரும் செய்திகள் எல்லாமே டூப். அதில்மாடர்ன் பொண்ணாக, சற்றே கிளாமர் காட்டி நடித்துள்ளேன், அவ்வளவுதான் என்கிறார் நயன்தாரா.கள்வனின் காதலி பட ஸ்டில்கள் வெளியான போது அம்புட்டு பேரும் ஆப் ஆகிப் போனார்கள். காரணம், அவர்கொடுத்திருந்த போஸ்கள். அத்தனையும் ஜில்லிட வைக்கும் ஜிலீர் கிளாமரில் தோய்ந்திருந்தன. இதை வைத்தே கள்வனின் காதலியில் நயன்தாராவை எப்படியெல்லாம் எஸ்.ஜே. சூர்யா உரித்திருப்பாரோ என்றகிளாமர் கனவுகளில் சின்னப் பசங்க மெதக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் இங்கே தான் ஒரு புல்ஸ்டாப்வைக்கிறார் நயன்தாரா. உண்மையில், கள்வனின் காதலி படக் கதை ரொம்பவும் அருமையானது. அட்டகாசமான காதல் கதை இது. ரொம்பவித்தியாசமான கதை, அதை அழகாக படமாக்கி வருகிறார்கள்.இதன் புகைப்படங்களைப் பார்த்து விட்டு நான் கிளாமரில் புகுந்து விளையாடியிருப்பதாக சிலர் நினைக்கிறார்கள்.ஆனால் அப்படியல்ல. மாடர்ன் பொண்ணாக சற்றே கிளாமர் காட்டி நடித்துள்ளேன், அவ்வளவு தான்.இதை விட பெரிய விஷயம், ஹீரோ எஸ்.ஜே. சூர்யா என்னை அதிகம் தொடாமல் நடித்துள்ளார். ரொம்பக்குறைவான காட்சிகளில் தான் என்னை அவர் தொட்டு நடித்திருப்பார் (தொடாமல் கவர்ச்சி காட்ட வைப்பதில்சூர்யா படு கில்லாடியாச்சே அம்மணி!

ஆபாசம் இல்லாத க.கா - நயன்தாரா கள்வனின் காதலி படத்தில் நான் அதிக கிளாமர் காட்டி நடித்திருப்பதாக வரும் செய்திகள் எல்லாமே டூப். அதில்மாடர்ன் பொண்ணாக, சற்றே கிளாமர் காட்டி நடித்துள்ளேன், அவ்வளவுதான் என்கிறார் நயன்தாரா.கள்வனின் காதலி பட ஸ்டில்கள் வெளியான போது அம்புட்டு பேரும் ஆப் ஆகிப் போனார்கள். காரணம், அவர்கொடுத்திருந்த போஸ்கள். அத்தனையும் ஜில்லிட வைக்கும் ஜிலீர் கிளாமரில் தோய்ந்திருந்தன. இதை வைத்தே கள்வனின் காதலியில் நயன்தாராவை எப்படியெல்லாம் எஸ்.ஜே. சூர்யா உரித்திருப்பாரோ என்றகிளாமர் கனவுகளில் சின்னப் பசங்க மெதக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் இங்கே தான் ஒரு புல்ஸ்டாப்வைக்கிறார் நயன்தாரா. உண்மையில், கள்வனின் காதலி படக் கதை ரொம்பவும் அருமையானது. அட்டகாசமான காதல் கதை இது. ரொம்பவித்தியாசமான கதை, அதை அழகாக படமாக்கி வருகிறார்கள்.இதன் புகைப்படங்களைப் பார்த்து விட்டு நான் கிளாமரில் புகுந்து விளையாடியிருப்பதாக சிலர் நினைக்கிறார்கள்.ஆனால் அப்படியல்ல. மாடர்ன் பொண்ணாக சற்றே கிளாமர் காட்டி நடித்துள்ளேன், அவ்வளவு தான்.இதை விட பெரிய விஷயம், ஹீரோ எஸ்.ஜே. சூர்யா என்னை அதிகம் தொடாமல் நடித்துள்ளார். ரொம்பக்குறைவான காட்சிகளில் தான் என்னை அவர் தொட்டு நடித்திருப்பார் (தொடாமல் கவர்ச்சி காட்ட வைப்பதில்சூர்யா படு கில்லாடியாச்சே அம்மணி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கள்வனின் காதலி படத்தில் நான் அதிக கிளாமர் காட்டி நடித்திருப்பதாக வரும் செய்திகள் எல்லாமே டூப். அதில்மாடர்ன் பொண்ணாக, சற்றே கிளாமர் காட்டி நடித்துள்ளேன், அவ்வளவுதான் என்கிறார் நயன்தாரா.

கள்வனின் காதலி பட ஸ்டில்கள் வெளியான போது அம்புட்டு பேரும் ஆப் ஆகிப் போனார்கள். காரணம், அவர்கொடுத்திருந்த போஸ்கள். அத்தனையும் ஜில்லிட வைக்கும் ஜிலீர் கிளாமரில் தோய்ந்திருந்தன.

இதை வைத்தே கள்வனின் காதலியில் நயன்தாராவை எப்படியெல்லாம் எஸ்.ஜே. சூர்யா உரித்திருப்பாரோ என்றகிளாமர் கனவுகளில் சின்னப் பசங்க மெதக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் இங்கே தான் ஒரு புல்ஸ்டாப்வைக்கிறார் நயன்தாரா.


உண்மையில், கள்வனின் காதலி படக் கதை ரொம்பவும் அருமையானது. அட்டகாசமான காதல் கதை இது. ரொம்பவித்தியாசமான கதை, அதை அழகாக படமாக்கி வருகிறார்கள்.

இதன் புகைப்படங்களைப் பார்த்து விட்டு நான் கிளாமரில் புகுந்து விளையாடியிருப்பதாக சிலர் நினைக்கிறார்கள்.ஆனால் அப்படியல்ல. மாடர்ன் பொண்ணாக சற்றே கிளாமர் காட்டி நடித்துள்ளேன், அவ்வளவு தான்.

இதை விட பெரிய விஷயம், ஹீரோ எஸ்.ஜே. சூர்யா என்னை அதிகம் தொடாமல் நடித்துள்ளார். ரொம்பக்குறைவான காட்சிகளில் தான் என்னை அவர் தொட்டு நடித்திருப்பார் (தொடாமல் கவர்ச்சி காட்ட வைப்பதில்சூர்யா படு கில்லாடியாச்சே அம்மணி!)


முதல் இரு படங்களில் நான் சேலை கட்டி நடித்திருப்பேன். ஆனால் தொடர்ந்து அதுபோல நடித்துக்கொண்டிருந்தால் நம்மை மூட்டை கட்டி அனுப்பி விடுவார்கள் என்பதால் மாடர்ன் பொண்ணாக நடிக்கும்வாய்ப்புக்காக காத்திருந்தேன்.

அப்போதுதான் கஜினி பட வாய்ப்பு வந்தது. தட்டாமல் அதை ஏற்றுக் கொண்டேன். அதிலும் கூட நான்ஆபாசமான கவர்ச்சி காட்டவில்லை. நிதானமான கிளாமரில் தான் அதில் வந்து போனேன்.

அதே போலத் தான் வல்லவன், கள்வனின் காதலி படங்களும். அறுவறுப்பு அடைய வைக்காத அளவுக்கு எனதுகிளாமர் இருக்கும். சிம்பு எனது உதடுகளைக் கடிப்பது போல வெளியான புகைப்படம் கூட உண்மையில் கடித்துஎடுக்கப்பட்டதல்ல, அது கிராபிக்ஸ் வேலை!


வல்லவன் படத்தின் கதையும் அருமையானது. இதிலும் நான் கலக்கியுள்ளேன். இப்போது கைவசம் இருக்கும் சிலதமிழ்ப் படங்களை முடித்து விட்டு தெலுங்கில் சில படங்களில் நடிக்கப் போகிறேன்.

நல்ல கதையாக உள்ள படங்களைத்தான் நான் எப்போதும் தேர்வு செய்வேன். கிளாமரை மட்டும் நான்நம்பியில்லை.

எந்த ரோல் கொடுத்தாலும் நான் நடிப்பேன்.

நயன்தாரா சொன்னது சரியா என்பதை படம் வந்த பின் பார்த்து விட்டு சொல்லுங்கோ!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil