கமலுடன் சேரும் நயன்தாரா !
ரஜினி, சரத்குமார் என இரண்டு முக்கிய ஸ்டார்களுடன் நடித்து முடித்து விட்ட நயன்தாரா அடுத்து, இன்னொரு சூப்பர் ஸ்டாரான கமல்ஹாசனுடனும் ஜோடி சேரப்போகிறார்.
சரத்குமாரின் ஐயா படத்தில் அறிமுகமாகிய நயன்தாராவுக்கு எடுத்தவுடனேயே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது. அறிமுகமான 2வதுபடத்திலேயே ரஜினிக்கு ஜோடி என்பதால் ரொம்பவே நெர்வஸாக காணப்பட்டார் நயன்தாரா.
இப்போது இன்னொரு இனிய அதிர்ச்சியில் மூழ்கியுள்ளார் நயன்தாரா. கமலுடன் ஜோடி சேரும் வாய்ப்பு அவரைத் தேடி வந்திருப்பதுதான் இனிய அதிர்ச்சிக்குகாரணம். கெளதம் மேனன் இயக்கும் வேட்டையாடு விளையாடு படத்தில் கமல் இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.
ஒரு கமலுக்கு ஜோடியாக ஜோதிகா ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டார். இன்னொரு கமலின் ஜோடியாக நடிக்க நல்ல ஆளைத் தேடி வந்தனர்.பல்வேறு அலசல்களுக்குப் பின்னர் நயன்தாரவை முடிவு செய்து அவரை தற்போது அணுகியுள்ளார்களாம்.
கரும்பு தின்ன இனிக்குமா? கமலுடன் நடிக்க மாட்டேன் என்று நயன்தாரா கூறப் போவதில்லை. இந்த வாய்ப்பு அவருக்கு ரொம்பவே மகிழ்ச்சியைக்கொடுத்துள்ளதாம்.
இதில் இன்னொரு விசேஷமும் உள்ளது. சந்திரமுகியிலும் ஜோதிகாவுடன் சேர்ந்து நயன்தாரா நடித்திருந்தார். அதில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார். இப்போதுவேட்டையாடு விளையாடு படத்திலும் இரண்டு நாயகிகளும் இணைந்து நடிக்கப் போகிறார்கள். இதில் இருவருமே கமலுக்கு ஜோடியாக வரப்போகிறார்கள்.
சந்திரமுகிக்குப் பிறகு ஜோ.வும், நயன்தாராவும் நல்ல தோழிகளாகி விட்டார்கள். இப்போது மீண்டும் இருவரும் சேர்ந்து நடிக்கப் போவதால், எக்ஸ்ட்ராசந்தோஷத்துடன் இருக்கிறார்கள்.
கமல் படமாச்சே, "வாய் விளையாட்டு" இல்லாமல் போகுமா. அதுவும் சிம்புவை தனது உதடுகளில் கடிக்க விட்ட நயன்தாராவின்போஸ்டர்கள் பட்டி தொட்டியெங்கும் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ள நிலையில் கமல் படத்தில் நயன்தாரா புக்ஆகியுள்ளதால், அவரது வாய்க்கு இங்கும் "வேலை" இருக்கும் என்றே தோன்றுகிறது!
நல்ல வெளயாட்டுப்பா!


Click it and Unblock the Notifications