»   »  கேரளாவில் வெறும் டெம்போ, கோடம்பாக்கத்தில் கேரவன்!

கேரளாவில் வெறும் டெம்போ, கோடம்பாக்கத்தில் கேரவன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நயன்தாரா பண்ணும் அலும்பு வர வரத் தாங்க முடியவில்லை என்கிறார்கள். சூப்பர் நடிகர்களுடன் தொடர்ந்து ஜோடி சேர்ந்து நடித்து வருவதால் ஷூட்டிங் ஸ்பாட்டில்அவர் வைக்கும் பல கோரிக்கைகள் டென்ஷனைக் கிளப்புகிறதாம்.

அம்மணி தனது தாய் மண்ணான கேரளாவில் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளும் போது எவ்வளவுக்கெவ்வளவு அடக்கமாக இருக்க முடியுமோ, அந்த அளவுக்குஇருந்து அடக்கமாக நடித்துக் கொடுக்கிறார்.

ஆனால் சென்னைக்கு வந்து விட்டாலோ, அவ்வளவுதான் நிலைமை தலைகீழாகி விடுகிறது. ஜெனீபர் லோபஸ், ஷரோன் ஸ்டோன் லெவலுக்கு தனது அந்தஸ்தை ஏத்திவிட்டுக் கொண்டு படு ரவுசு பண்ணுகிறார்.

கேரளாவில் எவ்வளவு பெரிய சூப்பர் நடிகர், நடிகையராக இருந்தாலும் கம்பெனி கொடுக்கும் வசதிகளுக்குள் தான் வந்து போக வேண்டும், நடித்துக் கொடுக்கவேண்டும். அவர்கள் தரும் வசதியை விட குண்டுமணி அளவுக்கு கூட கூடுதல் வசதியை எதிர்பார்க்கவே முடியாது.

குறிப்பாக வெளிப்புறப் படப்பிடிப்புகளின்போது கம்பெனி தருவதைத் தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கொடுக்கும் சாப்பாட்டைத் தான் சாப்பிட வேண்டும்.

வெளிப்புறப் படப்பிடிப்புகளுக்கு செல்லும்போது, ஓப்பன் ஏரில் ஹாயாக சேரைப் போட்டுக் கொண்டு காத்து வாங்கியவாறே ரெஸ்ட் எடுப்பது கேரள நடிகர்களின்வழக்கம். ரொம்ப வெயிலாக இருந்தால், டெம்போ வேனுக்குள் ஏறி அமர்ந்து கொள்வார்களாம்.

ஆனால் கோலிவுட்டிலோ நிலைமை தலைகீழ். வெளியில் ஆடிக் காத்தில் அம்மியே பறந்து கொண்டிருந்தாலும், கேரவன் எனப்படும், சகல வசதிகளும் உடையகுளிர்சாதன வேனில் அமர்ந்து கொண்டு ஏசியை புல்லாகப் போட்டுக் கொண்டு ஜாலியாக இருப்பார்கள் நம்ம ஊர் நடிகர், நடிகையர்.

இந்த வசதியைத் தான் நயன்தாராவும் அட்டு அலும்பாக அடம் பிடித்து வாங்கி அனுபவித்து வருகிறார். தனது படப்பிடிப்புகளின் போது கேரவன் வண்டி கண்டிப்பாகவேண்டும் என கண்டிஷன் போடுகிறாராம். ஒரு நாளைக்கு கேரவனுக்கு மட்டும் ஆகும் செலவு ரூ. 30,000. நயனதாரா கட்டாயப்படுத்துவதால் தயாரிப்பாளர்கள் வேறுவழியில்லாமல் இந்த வண்டியை புக் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

அது தவிர சாப்பாட்டு ஐட்டங்களிலும் அம்மணி டயட்டைக் கடைப்பிடிப்பதில்லை. சகட்டு மேனிக்கு வாங்கி சாப்பிட்டு, கூடவே ஜெலுசில் மாத்திரையையும் வாங்கிவாயில் போட்டுக் கொள்கிறாராம். உணவு உயர் தர ஹோட்டல்களில் இருந்து தான் வர வேண்டுமாம்.

இப்படி கட்டுப்பாடில்லாமல் உண்டதால் அவரது எடையும் குண்டாங்குதிரையாக உயர ஆரம்பித்துள்ளது. சமீபத்தில் மட்டும் 4 கிலோ வெயிட்டு போட்டிருக்கிறாராம்.

நயனதாராவுக்கு ரூ. 25 லட்சம் வரை சம்பளத்தையும் கொடுத்துவிட்டு கேரவன் வேனுக்காகவே தினசரி பல ஆயிரங்களை தயாரிப்பாளர் தரப்பு செலவிட வேண்டிவருவதால் படத்தின் பட்ஜெட்டும் எகிறுகிறதாம்.

இதே நயன்தாரா, கேரளாவில் படப்பிடிப்பு என்றால் எவ்வளவு அடக்கமாக நடித்துக் கொடுக்கிறார். தமிழ் படம் என்றால் ரொம்பத் தான் அலும்பு செய்கிறார் என்றுபுலம்புகிறார்கள் தயாரிப்பாளர்கள். (கேரளத்தில் மம்மூட்டி, மோகன்லாலுக்கே கேரவன் வசதி செய்து தரப்படுவதில்லை)

ஏய்யா, அங்க போகனும், அப்புறம் பொலம்பனும்?!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil