இந்திக்குப் போகும் நயன்தாரா தமிழில் நிலையான அஸ்திவாரம் போட்டு விட்ட நயன்தாரா பாலிவுட்டுக்கு குறி வைத்து விட்டார். ராஜ்குமார் சந்தோஷிதயாரிக்கும் படத்தில் நடிக்க இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.சமீபத்தில் வெளியான வல்லவன், கள்வனின் காதலி ஆகிய படங்களின் ஸ்டில்களைப் பார்த்த மலையாள ரசிகர்கள் மூக்கின்விரலை வைத்தார்களாம். மலையாளப் படங்களில் நடித்த நயன்தாராவா இது என்று ஆச்சரியப்படுகிறார்களாம். அதற்கு என்ன காரணம் என்று தானே கேட்கிறீர்கள். வேறொன்றுமில்லை. நயன்தாரா இதுவரை ஐந்தாறு மலையாளப்படங்களில் நடித்து விட்டார். ஆனால் ஒரு படத்தில் கூட இம்மியளவு கவர்ச்சியைக் கூட காட்டியதில்லை.சேலையைத் தவிர வேறு எந்த கவர்ச்சி உடைகளை அணிந்தது கிடையாது. கதாநாயகர்களுடன் கட்டிப்பிடித்து உருண்டது,உதடு கடி சமாச்சாரம் இப்படி எந்த சமாச்சாரங்களிலும் ஈடுபட்டதில்லை.ஆனால் தமிழில் சிம்புவுடன் வல்லவனில் உதடு கடி, கள்வனின் காதலியில் எஸ்.ஜே. சூர்யாவுடன் படு கவர்ச்சி என நயன்தாராகலக்கி வருவது மலையாள சேட்டன்களுக்கு படு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. என்ன இருந்தாலும் நம்ம ஊரு படங்களில் நயன் கவர்ச்சியை காட்ட மாட்டேன்கிறாரே என்ற ஏக்கம் இருக்கத்தானே செய்யும்.இப்படி மலையாள ரசிகர்களை ஏங்க வைத்துக் கொண்டிருக்கும் நயன்தாரா, தமிழில் வசமாக காலூன்றி விட்டார் என்றேகூறவேண்டும். எப்படியும் தமிழில் ஒரு ரவுண்டு வந்து விட வேண்டும் என்ற முடிவுடன் தான் இவர் உள்ளார்.ஏனென்றால் தமிழில் கிடைக்கும் வரவேற்பை வைத்து அப்படியே தெலுங்கு, இந்தி என எல்லையை விரிவுபடுத்தி விடலாம்என்பது தான் இவரது திட்டம்.இப்போது இவரது திட்டம் பலித்து விட்டது என்றே கூறவேண்டும். பாலிவுட்டில் நுழைய நயனுக்கு ஒரு அருமையான வாய்ப்புகிடைத்து விட்டது.அதுவும் இந்தியில் பிரபல தயாரிப்பாளரான ராஜ்குமார் சந்தோஷியின் படத்தில் நடிக்க நயன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.இவருக்கு ஜோடியாக சல்மான் கான் அல்லது ஹ்ருதிக் ரோஷன் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.ம்... ஜமாய்ங்க
தமிழில் நிலையான அஸ்திவாரம் போட்டு விட்ட நயன்தாரா பாலிவுட்டுக்கு குறி வைத்து விட்டார். ராஜ்குமார் சந்தோஷிதயாரிக்கும் படத்தில் நடிக்க இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் வெளியான வல்லவன், கள்வனின் காதலி ஆகிய படங்களின் ஸ்டில்களைப் பார்த்த மலையாள ரசிகர்கள் மூக்கின்விரலை வைத்தார்களாம். மலையாளப் படங்களில் நடித்த நயன்தாராவா இது என்று ஆச்சரியப்படுகிறார்களாம்.
அதற்கு என்ன காரணம் என்று தானே கேட்கிறீர்கள். வேறொன்றுமில்லை. நயன்தாரா இதுவரை ஐந்தாறு மலையாளப்படங்களில் நடித்து விட்டார். ஆனால் ஒரு படத்தில் கூட இம்மியளவு கவர்ச்சியைக் கூட காட்டியதில்லை.
சேலையைத் தவிர வேறு எந்த கவர்ச்சி உடைகளை அணிந்தது கிடையாது. கதாநாயகர்களுடன் கட்டிப்பிடித்து உருண்டது,உதடு கடி சமாச்சாரம் இப்படி எந்த சமாச்சாரங்களிலும் ஈடுபட்டதில்லை.
ஆனால் தமிழில் சிம்புவுடன் வல்லவனில் உதடு கடி, கள்வனின் காதலியில் எஸ்.ஜே. சூர்யாவுடன் படு கவர்ச்சி என நயன்தாராகலக்கி வருவது மலையாள சேட்டன்களுக்கு படு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
என்ன இருந்தாலும் நம்ம ஊரு படங்களில் நயன் கவர்ச்சியை காட்ட மாட்டேன்கிறாரே என்ற ஏக்கம் இருக்கத்தானே செய்யும்.
இப்படி மலையாள ரசிகர்களை ஏங்க வைத்துக் கொண்டிருக்கும் நயன்தாரா, தமிழில் வசமாக காலூன்றி விட்டார் என்றேகூறவேண்டும். எப்படியும் தமிழில் ஒரு ரவுண்டு வந்து விட வேண்டும் என்ற முடிவுடன் தான் இவர் உள்ளார்.
ஏனென்றால் தமிழில் கிடைக்கும் வரவேற்பை வைத்து அப்படியே தெலுங்கு, இந்தி என எல்லையை விரிவுபடுத்தி விடலாம்என்பது தான் இவரது திட்டம்.
இப்போது இவரது திட்டம் பலித்து விட்டது என்றே கூறவேண்டும். பாலிவுட்டில் நுழைய நயனுக்கு ஒரு அருமையான வாய்ப்புகிடைத்து விட்டது.
அதுவும் இந்தியில் பிரபல தயாரிப்பாளரான ராஜ்குமார் சந்தோஷியின் படத்தில் நடிக்க நயன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கு ஜோடியாக சல்மான் கான் அல்லது ஹ்ருதிக் ரோஷன் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.
ம்... ஜமாய்ங்க


Click it and Unblock the Notifications