»   »  நயனதாராவின் உ ! அஆ என்று ஒரு படம் வந்து விட்டது, அடுத்து இஈ என்று வந்தாலும் வரலாம். ஆனால் அதற்கு முன்பாக உஎன்ற பெயரில் ஒரு படம் வரப் போகிறது.நயனதாராவும், ஜீவாவும் இந்தப் படத்தில் நடிக்கப் போகிறார்கள். படத்தை இயக்கப் போவது இயற்கை புகழ்ஜனநாதன். முதல் படத்தையே தேசிய விருது பெறும் படமாக எடுத்தவர் ஜனநாதன்.இந்தப் படத்தின் கதையை முடிவு செய்தவுடன், ஹீரோயினாக நயனதாரவை மட்டுமே நடிக்க வைக்கமுடிவெடுத்தாராம் ஜனநாதன்.இதுவரை மூத்தவர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்த நயனதாரா இப்போதெல்லாம் சின்னப் பசங்களுடன்தான்சோடி போடுவதில் ரொம்பவே ஆர்வம் காட்டுகிறார்.மலையாளத்தில் மோகன் லால், மம்மூட்டி ஆகிய அப்பப்பா வயது ஆட்களுடனும் தமிழில் சரத்குமார், ரஜினிஆகிய டாடி வயது நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தவர் இப்போது முத்திய இளைஞரான எஸ்.ஜே.சூர்யாவுடன்கள்வனின் காதலியில் நடிக்கிறார்.அடுத்ததாக சிம்புவுடன் வல்லவன், சூர்யாவுடன் கஜினி என சின்னப் புள்ளைக சகவாசத்தையும்வைத்திருக்கிறார்.இப்போது உ வில் ரொம்பச் சின்னப் பையனான ஜீவாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார் நயனதாரா. அதேசமயம்,ஆரம்பத்தில் கை தூக்கி விட்ட பெரியவர்களையும் கைவிட விரும்பவில்லை நயன்ஸ்.தனது முதல் தமிழ்ப் பட நாயகனான சரத்குமாருடன் இணைந்து அடுத்து ஒரு படத்தில் நடிக்கவும் புக்ஆகியுள்ளாராம் நயனதாரா.இதுதவிர தெலுங்கில் பி.வாசு இயக்கப் போகும் புதிய படத்திலும் நயன்ஸ் தான் நாயகியாம். இதில்நயனதாராவுக்கு ஜோடியாக நடிப்பது மகா பெரிசு பாலகிருஷ்ணா. (எப்போதும் பெரிய கரு கரு விக்கும், முகம்முழுவதும் மேக்-அப் மாவுமாக திரிவாரே அவரே தான்.)நயனதாராவை தெலுங்குக்கு இழுத்துப் போவதில் வாசு தீவிர ஆர்வம் காட்டுவதற்குக் காரணம் உண்டு. இருவருமேமலையாளத்துக்காரர்கள். இந்தப் படத்தில் நடிக்க நயனதாராவுக்கு வாசு வாங்கித் தந்துள்ள சம்பளம் ரூ. 25 லட்சம். முதல்தெலுங்குப் படத்திலேயே இம்புட்டு ஊதியம் வாங்கிய முதல் நடிகை நயன் தானாம்.இவர் தவிர இந்தியில் டைரக்ஷன் மற்றும் தயாரிப்பில் சக்கப் போடு போட்டு வரும் தஞ்சாவூர்காரரான ராஜ்குமார்சந்தோஷி (அந்த ஊருக்கு ஏத்தபடி பெயரை மாற்றிக் கொண்டவர்) தான் எடுக்கப் போகும் ஒரு இந்திப் படத்திலும்நயனதாராவை புக் செய்திருக்கிறார். அந்தப் படத்துக்கு இசையமைக்கப் போவது ஏ.ஆர்.ரஹ்மான்.தன்னைத் தேடி சந்தோஷியே வந்துவிட்டதில் ஏகத்துக்கும் சந்தோஷமாகிவிட்ட நயனதாரா இந்தியில் நடிக்கஉடனே ஒப்புக் கொண்டதோடு, ரேட் விஷயத்திலும் எந்த கெடுபிடியும் இல்லை என்று தானாகவே முன் வந்துசொன்னாராம் நயனதாரா.ஆனால், சந்தோஷி சிரித்துக் கொண்டே தனது செக் புக்கை எடுத்து ஒரு அமெளன்டைப் போட்டு நயனிடம்தந்தாராம். நயனுக்கு மயக்கம் வராத குறையாம். தமிழில் அவர் வாங்குவதைவிட 2 மடங்கு போட்டு காசைச்தந்துவிட்டுப் போயுள்ளார் ராஜ்குமம் சந்தோஷி.நயனதாரா முன்பெல்லாம் சூட்டிங் ஸ்பாட்டில் எப்போதும் டைரக்டரின் கண்ணில் படுவது மாதிரியே திரிவார்.ஆனால், இப்போதெல்லாம் தனது ஷாட் முடிந்ததும் தனக்காகவே கொண்டு வந்து நிறுத்தப்படும் கேரவன்வண்டியில் ஏறி ஏசி சூழலுக்குப் போய் விடுகிறார்.மதியம் உணவு முடிந்ததும் கேரவனுக்குள் போய் அரை மணி நேரம் தூக்கமும் போடுகிறார். இதற்காகவே தினமும்ரூ. 3,000 செலவழித்து கேரவனை கொண்டு வந்து நயனதாரா இருக்கும் இடத்தில் நிறுத்திவிடுகிறார்கள்தயாரிப்பாளர்கள்.ஆக, ஏகப்பட்ட வாய்ப்புக்களுடன் வசதிகளுடன் நயனதாராவின் காட்டில் மும்பை மழை பெய்து வருகிறது.எல்லாம் சரி, அது என்ன உ?... உம்மாவின் சுருக்கமோ!

நயனதாராவின் உ ! அஆ என்று ஒரு படம் வந்து விட்டது, அடுத்து இஈ என்று வந்தாலும் வரலாம். ஆனால் அதற்கு முன்பாக உஎன்ற பெயரில் ஒரு படம் வரப் போகிறது.நயனதாராவும், ஜீவாவும் இந்தப் படத்தில் நடிக்கப் போகிறார்கள். படத்தை இயக்கப் போவது இயற்கை புகழ்ஜனநாதன். முதல் படத்தையே தேசிய விருது பெறும் படமாக எடுத்தவர் ஜனநாதன்.இந்தப் படத்தின் கதையை முடிவு செய்தவுடன், ஹீரோயினாக நயனதாரவை மட்டுமே நடிக்க வைக்கமுடிவெடுத்தாராம் ஜனநாதன்.இதுவரை மூத்தவர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்த நயனதாரா இப்போதெல்லாம் சின்னப் பசங்களுடன்தான்சோடி போடுவதில் ரொம்பவே ஆர்வம் காட்டுகிறார்.மலையாளத்தில் மோகன் லால், மம்மூட்டி ஆகிய அப்பப்பா வயது ஆட்களுடனும் தமிழில் சரத்குமார், ரஜினிஆகிய டாடி வயது நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தவர் இப்போது முத்திய இளைஞரான எஸ்.ஜே.சூர்யாவுடன்கள்வனின் காதலியில் நடிக்கிறார்.அடுத்ததாக சிம்புவுடன் வல்லவன், சூர்யாவுடன் கஜினி என சின்னப் புள்ளைக சகவாசத்தையும்வைத்திருக்கிறார்.இப்போது உ வில் ரொம்பச் சின்னப் பையனான ஜீவாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார் நயனதாரா. அதேசமயம்,ஆரம்பத்தில் கை தூக்கி விட்ட பெரியவர்களையும் கைவிட விரும்பவில்லை நயன்ஸ்.தனது முதல் தமிழ்ப் பட நாயகனான சரத்குமாருடன் இணைந்து அடுத்து ஒரு படத்தில் நடிக்கவும் புக்ஆகியுள்ளாராம் நயனதாரா.இதுதவிர தெலுங்கில் பி.வாசு இயக்கப் போகும் புதிய படத்திலும் நயன்ஸ் தான் நாயகியாம். இதில்நயனதாராவுக்கு ஜோடியாக நடிப்பது மகா பெரிசு பாலகிருஷ்ணா. (எப்போதும் பெரிய கரு கரு விக்கும், முகம்முழுவதும் மேக்-அப் மாவுமாக திரிவாரே அவரே தான்.)நயனதாராவை தெலுங்குக்கு இழுத்துப் போவதில் வாசு தீவிர ஆர்வம் காட்டுவதற்குக் காரணம் உண்டு. இருவருமேமலையாளத்துக்காரர்கள். இந்தப் படத்தில் நடிக்க நயனதாராவுக்கு வாசு வாங்கித் தந்துள்ள சம்பளம் ரூ. 25 லட்சம். முதல்தெலுங்குப் படத்திலேயே இம்புட்டு ஊதியம் வாங்கிய முதல் நடிகை நயன் தானாம்.இவர் தவிர இந்தியில் டைரக்ஷன் மற்றும் தயாரிப்பில் சக்கப் போடு போட்டு வரும் தஞ்சாவூர்காரரான ராஜ்குமார்சந்தோஷி (அந்த ஊருக்கு ஏத்தபடி பெயரை மாற்றிக் கொண்டவர்) தான் எடுக்கப் போகும் ஒரு இந்திப் படத்திலும்நயனதாராவை புக் செய்திருக்கிறார். அந்தப் படத்துக்கு இசையமைக்கப் போவது ஏ.ஆர்.ரஹ்மான்.தன்னைத் தேடி சந்தோஷியே வந்துவிட்டதில் ஏகத்துக்கும் சந்தோஷமாகிவிட்ட நயனதாரா இந்தியில் நடிக்கஉடனே ஒப்புக் கொண்டதோடு, ரேட் விஷயத்திலும் எந்த கெடுபிடியும் இல்லை என்று தானாகவே முன் வந்துசொன்னாராம் நயனதாரா.ஆனால், சந்தோஷி சிரித்துக் கொண்டே தனது செக் புக்கை எடுத்து ஒரு அமெளன்டைப் போட்டு நயனிடம்தந்தாராம். நயனுக்கு மயக்கம் வராத குறையாம். தமிழில் அவர் வாங்குவதைவிட 2 மடங்கு போட்டு காசைச்தந்துவிட்டுப் போயுள்ளார் ராஜ்குமம் சந்தோஷி.நயனதாரா முன்பெல்லாம் சூட்டிங் ஸ்பாட்டில் எப்போதும் டைரக்டரின் கண்ணில் படுவது மாதிரியே திரிவார்.ஆனால், இப்போதெல்லாம் தனது ஷாட் முடிந்ததும் தனக்காகவே கொண்டு வந்து நிறுத்தப்படும் கேரவன்வண்டியில் ஏறி ஏசி சூழலுக்குப் போய் விடுகிறார்.மதியம் உணவு முடிந்ததும் கேரவனுக்குள் போய் அரை மணி நேரம் தூக்கமும் போடுகிறார். இதற்காகவே தினமும்ரூ. 3,000 செலவழித்து கேரவனை கொண்டு வந்து நயனதாரா இருக்கும் இடத்தில் நிறுத்திவிடுகிறார்கள்தயாரிப்பாளர்கள்.ஆக, ஏகப்பட்ட வாய்ப்புக்களுடன் வசதிகளுடன் நயனதாராவின் காட்டில் மும்பை மழை பெய்து வருகிறது.எல்லாம் சரி, அது என்ன உ?... உம்மாவின் சுருக்கமோ!

Subscribe to Oneindia Tamil

அஆ என்று ஒரு படம் வந்து விட்டது, அடுத்து இஈ என்று வந்தாலும் வரலாம். ஆனால் அதற்கு முன்பாக உஎன்ற பெயரில் ஒரு படம் வரப் போகிறது.

நயனதாராவும், ஜீவாவும் இந்தப் படத்தில் நடிக்கப் போகிறார்கள். படத்தை இயக்கப் போவது இயற்கை புகழ்ஜனநாதன். முதல் படத்தையே தேசிய விருது பெறும் படமாக எடுத்தவர் ஜனநாதன்.

இந்தப் படத்தின் கதையை முடிவு செய்தவுடன், ஹீரோயினாக நயனதாரவை மட்டுமே நடிக்க வைக்கமுடிவெடுத்தாராம் ஜனநாதன்.


இதுவரை மூத்தவர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்த நயனதாரா இப்போதெல்லாம் சின்னப் பசங்களுடன்தான்சோடி போடுவதில் ரொம்பவே ஆர்வம் காட்டுகிறார்.

மலையாளத்தில் மோகன் லால், மம்மூட்டி ஆகிய அப்பப்பா வயது ஆட்களுடனும் தமிழில் சரத்குமார், ரஜினிஆகிய டாடி வயது நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தவர் இப்போது முத்திய இளைஞரான எஸ்.ஜே.சூர்யாவுடன்கள்வனின் காதலியில் நடிக்கிறார்.

அடுத்ததாக சிம்புவுடன் வல்லவன், சூர்யாவுடன் கஜினி என சின்னப் புள்ளைக சகவாசத்தையும்வைத்திருக்கிறார்.

இப்போது உ வில் ரொம்பச் சின்னப் பையனான ஜீவாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார் நயனதாரா. அதேசமயம்,ஆரம்பத்தில் கை தூக்கி விட்ட பெரியவர்களையும் கைவிட விரும்பவில்லை நயன்ஸ்.

தனது முதல் தமிழ்ப் பட நாயகனான சரத்குமாருடன் இணைந்து அடுத்து ஒரு படத்தில் நடிக்கவும் புக்ஆகியுள்ளாராம் நயனதாரா.

இதுதவிர தெலுங்கில் பி.வாசு இயக்கப் போகும் புதிய படத்திலும் நயன்ஸ் தான் நாயகியாம். இதில்நயனதாராவுக்கு ஜோடியாக நடிப்பது மகா பெரிசு பாலகிருஷ்ணா. (எப்போதும் பெரிய கரு கரு விக்கும், முகம்முழுவதும் மேக்-அப் மாவுமாக திரிவாரே அவரே தான்.)


நயனதாராவை தெலுங்குக்கு இழுத்துப் போவதில் வாசு தீவிர ஆர்வம் காட்டுவதற்குக் காரணம் உண்டு. இருவருமேமலையாளத்துக்காரர்கள். இந்தப் படத்தில் நடிக்க நயனதாராவுக்கு வாசு வாங்கித் தந்துள்ள சம்பளம் ரூ. 25 லட்சம். முதல்தெலுங்குப் படத்திலேயே இம்புட்டு ஊதியம் வாங்கிய முதல் நடிகை நயன் தானாம்.

இவர் தவிர இந்தியில் டைரக்ஷன் மற்றும் தயாரிப்பில் சக்கப் போடு போட்டு வரும் தஞ்சாவூர்காரரான ராஜ்குமார்சந்தோஷி (அந்த ஊருக்கு ஏத்தபடி பெயரை மாற்றிக் கொண்டவர்) தான் எடுக்கப் போகும் ஒரு இந்திப் படத்திலும்நயனதாராவை புக் செய்திருக்கிறார். அந்தப் படத்துக்கு இசையமைக்கப் போவது ஏ.ஆர்.ரஹ்மான்.

தன்னைத் தேடி சந்தோஷியே வந்துவிட்டதில் ஏகத்துக்கும் சந்தோஷமாகிவிட்ட நயனதாரா இந்தியில் நடிக்கஉடனே ஒப்புக் கொண்டதோடு, ரேட் விஷயத்திலும் எந்த கெடுபிடியும் இல்லை என்று தானாகவே முன் வந்துசொன்னாராம் நயனதாரா.


ஆனால், சந்தோஷி சிரித்துக் கொண்டே தனது செக் புக்கை எடுத்து ஒரு அமெளன்டைப் போட்டு நயனிடம்தந்தாராம். நயனுக்கு மயக்கம் வராத குறையாம். தமிழில் அவர் வாங்குவதைவிட 2 மடங்கு போட்டு காசைச்தந்துவிட்டுப் போயுள்ளார் ராஜ்குமம் சந்தோஷி.

நயனதாரா முன்பெல்லாம் சூட்டிங் ஸ்பாட்டில் எப்போதும் டைரக்டரின் கண்ணில் படுவது மாதிரியே திரிவார்.ஆனால், இப்போதெல்லாம் தனது ஷாட் முடிந்ததும் தனக்காகவே கொண்டு வந்து நிறுத்தப்படும் கேரவன்வண்டியில் ஏறி ஏசி சூழலுக்குப் போய் விடுகிறார்.

மதியம் உணவு முடிந்ததும் கேரவனுக்குள் போய் அரை மணி நேரம் தூக்கமும் போடுகிறார். இதற்காகவே தினமும்ரூ. 3,000 செலவழித்து கேரவனை கொண்டு வந்து நயனதாரா இருக்கும் இடத்தில் நிறுத்திவிடுகிறார்கள்தயாரிப்பாளர்கள்.

ஆக, ஏகப்பட்ட வாய்ப்புக்களுடன் வசதிகளுடன் நயனதாராவின் காட்டில் மும்பை மழை பெய்து வருகிறது.

எல்லாம் சரி, அது என்ன உ?... உம்மாவின் சுருக்கமோ!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil