»   »  புண்ணாகிப் போன நயன்தாராவின் உதடுகள்! நயன்தாராவின் அழகான உதடு இப்போது புண்ணாகிப் போய் வாயைத் திறக்கக் கூட முடியாமல் அவஸ்தைப்படுகிறாராம்.எல்லாம் இயக்குநர் ஜனநாதனால் வந்த வினைதான்!

புண்ணாகிப் போன நயன்தாராவின் உதடுகள்! நயன்தாராவின் அழகான உதடு இப்போது புண்ணாகிப் போய் வாயைத் திறக்கக் கூட முடியாமல் அவஸ்தைப்படுகிறாராம்.எல்லாம் இயக்குநர் ஜனநாதனால் வந்த வினைதான்!

Subscribe to Oneindia Tamil

நயன்தாராவின் அழகான உதடு இப்போது புண்ணாகிப் போய் வாயைத் திறக்கக் கூட முடியாமல் அவஸ்தைப்படுகிறாராம்.எல்லாம் இயக்குநர் ஜனநாதனால் வந்த வினைதான்! அப்படி என்னதான் செய்தார் ஜனநாதன்.

ரொம்ப சிம்பிளான மேட்டர்தான். இயற்கை படத்தை எடுத்த ஜனநாதன் இப்போது நயன்தாரா, ஜீவா ஜோடி நடிக்க ஈ என்றபடத்தை இயக்கி வருகிறார். இதில் இசைக் கலைஞராக வருகிறாராம் நயன்தாரா. இதற்காக சில வாத்தியங்களை வாசிக்கக் கற்றுக்கொள்ளுமாறு ஜனநாதன் நயனிடம் கூறியுள்ளார்.

அதற்கென்ன கற்றுக் கொண்டால் போச்சு என்று தெரியாத்தனமாக வாயை விட்டு விட்டார். இப்போது புண்ணாகிப் போய்நிற்கிறார்!


படத்தில் ஒரு காட்சிப் படி கிளாரினெட் வாசிப்பவராக நயன்தாரா வருகிறார். காட்சி தத்ரூபமாக (இது ஒன்னைச்சொல்லிருவாங்கப்பா!) வருவதற்காக நிஜகமாகவே கிளாரினெட் வாசிப்பது போல காட்சியை எடுக்க முடிவு செய்தார் ஜனநாதன்.

இதற்காக நயனிடம் ஒரு கிளாரினெட்டைக் கொடுத்து ஊதிப் பழகுங்க என்று சொல்லியுள்ளார். அதற்கு முன்பு கிளாரினெட்டைப்பார்த்தேயிராத நயன்தாரா, தனது சொப்பு வாயில் கிளாரினெட்டை வைத்து, அழகான உதடுகளைக் குவித்து வாசித்துப்பழகியுள்ளார்.

வாசிக்க வாசிக்க அவரது வாயில் வலியே வ்நது விட்டதாம், இசைதான் கிளாரினெட்டிலிருந்து வரவில்லை! கடைசியில்கிளாரினெட்டை வாயில் வைத்து வாசித்ததால் உதடுகள் கன்னிப் போய் வலி தாங்க முடியவில்லையாம். இதனால் கிளாரினெட்காட்சியை கட் செய்து விட்டு வேறு காட்சிகளை எடுத்து வருகிறாராம் ஜனநாதன்.


என்ன நயன் ரொம்ப வலிக்கிறதா என்று அவரிடம் கேட்டால், உதடுகளை மெல்ல மெல்ல தடவி விட்டுக் கொண்டே ஆமாங்க,என் கூட பேசாதீங்க (கோபத்தில் அல்ல, வலியின் காரணமாக) என்று கூறி விட்டு அமர்ந்து விடுகிறார்.

நயன்தாராவின் உதட்டில் என்னதான் இருக்கிறதோ, எல்லாப் பேருமே அவரது உதடுகளையே குறி வைக்கிறார்கள். முதலில் சிம்புகடித்தார், எஸ்.ஜே. சூர்யாவின் கள்வனின் காதலியிலும் உதட்டுக் கடி இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இப்போது வாசிக்கவைத்து உதட்டைப் புண்ணாக்கி விட்டார்கள்.

உதட்டுக்கு சுத்திப் போடுங்க நயன், கண்ணு பட்டிருக்கப் போவுது!

Read more about: nayantharas lips in trobule
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil