»   »  நயனதாராவின் ஸ்விம் சூட்

நயனதாராவின் ஸ்விம் சூட்

Subscribe to Oneindia Tamil

அஜீத்தின் பில்லா படத்தில் நயனதாரா நீச்சல் உடையில் கவர்ச்சிகரமாக நடித்து படத்துக்கு சுறுசுறுப்பேற்றியுள்ளாராம்.

முன்னணி நடிகைகள் ஸ்விம் சூட்டில் நடிப்பது என்பது கொஞ்ச காலமாகவே இல்லாமல் போய் விட்டது. அப்படி நடித்தால் உடனே, கிளாமராக நடிக்கிறார் என்று முத்திரை குத்தி விடுகிறார்கள் என்பதால் அதைத் தவிர வேறு கிளாமர் உடைகளில் நடித்து விட்டுப் போய் விடுகிறார்கள்.

சமீபத்திய நடிகைகள் யாரும் ஸ்விம் சூட்டில் வந்ததில்லை. ஆனால் முதன் முதலாக நமீதா, கவர்ச்சி ரசம் சொட்டச் சொட்ட கெட்டவன் படத்தில் டூ பீஸ் உடையில் வந்து கிளுகிளுக்க வைக்கப் போகிறார்.

அதேபோல நயனதாராவும் பில்லா படத்தில் ஸ்விம் சூட்டில் நடித்து அசத்தியுள்ளாராம். அஜீத்துடன் இணைந்து பில்லாவில் நடித்துள்ள நயனதாராவுக்கு சில கிளாமரான காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது.

ஒரிஜினல் பில்லா படத்தில் இருந்ததைப் போல இந்தப் படத்திலும் அவரது கேரக்டருக்கு கிளாமர் முலாம் பூசப்பட்டிருப்பதால் சரி என்று ஒப்புக் கொண்டார் நயனதாரா. இந்த ஸ்விம் சூட் காட்சியில் படு எழிலாக இருக்கிறாராம் நயனதாரா.

இதைக் கேள்விப்பட்ட யாரடி நீ மோகினி பட இயக்குநர் (தனுஷ் நடிக்க, அவரது அப்பா தயாரிக்க, நயனதாரா நடிக்கும் படம்) இந்தப் படத்திலும் நீங்கள் கிளாமராக நடிக்க வேண்டும் என்று நயனதாராவிடம் கேட்டுள்ளார். அதை விட வற்புறுத்தினார் என்று சொல்லலாம்.

ஆனால் தலையை படு வேகமாக ஆட்டியபடி மறுத்து விட்ட நயனதாரா, அது வேறு, இது வேறு என்று கூறி கிளாமர் காட்ட முடியாது என்று மறுத்து விட்டாராம்.

பில்லாவில் நமீதாவும் இருக்கிறார் என்பது பழைய செய்தி. அதில் கிளாமர் கடலில் முக்குளித்து இருக்கிறார் என்பது புதிய செய்தி. அவருக்குப் போட்டியாக நயனதாராவும் உசுப்பலாக நடித்துள்ளார் என்பது ரொம்ப ரொம்ப புதிய செய்தி.

சிவாஜியில் இடம் பெற்ற பல்லலேக்கா பாட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஆடிய நயனதாராவைப் பார்த்த பலரும், என்ன இது இப்படி தொத்தலாக இருக்கிறாரே என்று ஆச்சரியப்பட்டிருப்பார்கள். முன்பிருந்த எடையில் 10 கிலோவைக் குறைத்து விட்டதால் வந்த வினைதான் இது.

பில்லா தனக்கு தமிழில் புதிய பாதையை காட்டும் என்ற நம்பிக்கையில் உள்ளார் நயனதாரா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil