மலர் டீச்சர் ஆளுக்காக ஐயர் ஆத்து பெண்ணாக மாறும் நயன்தாரா
சென்னை: நிவின் பாலி படத்தில் நயன்தாரா ஐயர் ஆத்து பெண்ணாக நடிக்கிறாராம்.
நயன்தாரா மலையாள படங்களில் நடித்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்நிலையில் அவர் நிவின் பாலி ஜோடியாக லவ் ஆக்ஷன் டிராமா என்ற மலையாள படத்தில் நடிக்க உள்ளார்.
பிரபல நடிகர் ஸ்ரீனிவாசனின் மகன் தியான் இயக்கும் முதல் படம் இது.

சாட்டிலைட் உரிமம்
லவ் ஆக்ஷன் டிராமா படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதி அல்லது ஜூன் மாத துவக்கத்தில் துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது. படப்பிடிப்பு துவங்கும் முன்பே அதன் சாட்டிலைட் உரிமம் பெரிய விலைக்கு போயுள்ளது.

நயன்தாரா
நயன்தாரா, நிவின் பாலி நடிக்கும் இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பே துவங்காத நிலையில் சாட்டிலைட் உரிமம் பெரிய தொகைக்கு போயுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தமிழ்
படத்தில் தமிழ் மற்றும் மலையாளம் பேசும் ஐயர் ஆத்து பெண்ணாக நயன்தாரா நடிக்கிறாராம். நயன்தாரா ஐயர் ஆத்து பெண்ணாக நடிப்பது இது முதல் முறை அல்ல.

கவனம்
விக்னேஷ் சிவனை திருமணம் செய்ய முடிவு செய்துள்ள நயன்தாரா மலையாள திரையுலகில் கூடுதல் கவனம் செலுத்த தீர்மானித்துள்ளார். இந்நிலையில் அவர் லவ் ஆக்ஷன் டிராமா படத்தில் நடிக்கிறார்.

திருமணம்
எனக்கு கல்யாண வயசு வந்துடுத்துடி என்று விக்னேஷ் சிவன் வேறு பப்ளிக்காக நயன்தாராவிடம் இன்ஸ்டாகிராமில் ப்ரொபோஸ் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











