»   »  பெரிய தொகை தரோம், நடிங்க ப்ளீஸ்: நயன்தாராவை அழைக்கும் சங்கமித்ரா டீம்

பெரிய தொகை தரோம், நடிங்க ப்ளீஸ்: நயன்தாராவை அழைக்கும் சங்கமித்ரா டீம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சங்கமித்ரா படத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறதாம்.

தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சுந்தர் சி. இயக்கும் மெகா பட்ஜெட் படம் சங்கமித்ரா. கேன்ஸ் திரைப்பட விழாவில் சங்கமித்ராவை அறிமுகம் செய்து வைத்தனர்.

திரைப்பட விழா முடிந்த கையோடு ஸ்ருதி ஹாஸன் படத்தில் இருந்து விலகினார்.

அனுஷ்கா

அனுஷ்கா

வரலாற்று சிறப்பு மிக்க படத்தில் அனுஷ்காவை விட யார் அதகளம் செய்யப் போகிறார்கள் என்று அவரிடம் கேட்டதற்கு அவர் நடிக்க மறுத்துவிட்டாராம்.

நயன்தாரா

நயன்தாரா

அனுஷ்கா நடிக்க மறுத்ததை அடுத்து சங்கமித்ராவாக நடிக்குமாறு நயன்தாராவிடம் கேட்டுள்ளார்களாம். நயன்தாராவுக்கு பெரிய தொகையை சம்பளமாக கொடுக்கவும் தயாரிப்பாளர் தயாராம்.

படங்கள்

படங்கள்

நயன்தாரா கை நிறைய படங்கள் வைத்திருக்கிறார். இந்நிலையில் சங்கமித்ராவுக்கு கூடுதல் காலம் டேட்ஸ் கேட்பதால் யோசிக்கிறாராம். தனது பிற படங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் டேட்ஸ் கேட்டால் நயன் நடிப்பாராம்.

ஹன்சிகா

ஹன்சிகா

ஸ்ருதி ஹாஸன் விலகியதை அடுத்து ஹன்சிகாவை தான் ஹீரோயினாக்க நினைத்தார் சுந்தர் சி. ஆனால் மார்க்கெட் இல்லாத ஹன்சிகா வேண்டாம் என்று தயாரிப்பு தரப்பில் கறாராக கூறிவிட்டார்களாம்.

English summary
According to reports, Sangamithra team is in talks with Nayanthara for the historical movie to be directed by Sundar C.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil