»   »  விஜய் சேதுபதியுடன் "டப்பாங்குத்து" டான்ஸ் ஆடும் நயன்தாரா.... தர்மதுரைக்காக!

விஜய் சேதுபதியுடன் "டப்பாங்குத்து" டான்ஸ் ஆடும் நயன்தாரா.... தர்மதுரைக்காக!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் சேதுபதியின் தர்மதுரை படத்தில் ஒரு பாடலுக்கு அயிட்டம் டான்ஸ் ஆடவிருக்கிறார் நயன்தாரா.

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பவர் நயன்தாரா. இந்த வருடத்தில் அடுத்தடுத்து 3 ஹிட்களைக் கொடுத்து ஹாட்ரிக் நாயகி என்ற அந்தஸ்தில் இருக்கிறார்.

இந்நிலையில் வளர்ந்து வரும் தர்மதுரை படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஒரு பாடலுக்கு அயிட்டம் டான்ஸ் ஆடவிருக்கிறாராம் நயன்.

Nayanthara again Team Up with Vijay Sethupathi

இந்தப் பாடலை அடுத்த வாரத்தில் படம்பிடிக்க இருப்பதாக படப்பிடிப்புக் குழுவினர் கூறுகின்றனர். தர்மதுரை படத்தின் படப்பிடிப்பு தற்போது தேனி வட்டாரப் பகுதிகளில் வேகமாக நடைபெற்று வருகிறது.

விஜய் சேதுபதி - சீனு ராமசாமி 3 வது முறையாக இணையும் இப்படத்தில் ராதிகா மீண்டும் விஜய் சேதுபதியின் அம்மாவாக நடிக்கிறார்.

தர்மதுரை மூலம் முதன்முதலாக ஆக்ஷன் பாதையில் அடியெடுத்து வைத்திருக்கும் சீனு ராமசாமி ஜல்லிக்கட்டு மற்றும் அது தொடர்பான காட்சிகளையும் படம்பிடிக்க இருக்கிறாராம்.

நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதி - நயன்தாரா நடிப்பு மிகவும் பேசப்பட்டதால், இந்தப் படத்திலும் செண்டிமெண்ட் கருதி நயனை ஒரு பாடலுக்கு ஆடவைக்க முடிவெடுத்திருக்கிறது படக்குழு.

English summary
After a Huge Hit of Naanum Rowdy Dhaan now Nayanthara again Team Up with Vijay Sethupathi for Dharmadurai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil