டிரான்ஸ்பரன்ட் நயன்தாரா vs ஸ்லீவ்லெஸ் சமந்தா.. யாரோட லுக் பெஸ்ட்டா இருக்கு?.. குவியும் கமெண்ட்ஸ்!

மும்பை: தென்னிந்திய நடிகைகள் பாலிவுட்டில் பட்டையை கிளப்பி வரும் நிலையில் பாலிவுட் நடிகைகள் எல்லாம் ஓரம் போங்க என சொல்வது போல நேற்று நடைபெற்ற விருது விழாவில் நயன்தாரா மற்றும் சமந்தா கவர்ச்சி உடையில் வந்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் பிரபலங்களையும் மெய்மறக்கச் செய்து விட்டனர்.

GQ 35 Most Influential Young Indians Award எனும் விருது விழா நிகழ்ச்சி நேற்று மும்பையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கண்மணி நயன்தாரா கலக்கல் உடையில் வந்து செம ஸ்கோர் செய்துள்ளார். அதே போல மும்பையில் நடைபெற்ற இன்னொரு நிகழ்ச்சியில் கதீஜா சமந்தா கலந்து கொண்ட புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.

Nayanthara and Samantha latest Mumbai event photos trending and creates debate

நேற்று நடைபெற்ற விருது விழாவில் நடிகை சமந்தா மற்றும் நயன்தாரா பங்கேற்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் தற்போது சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வரும் நிலையில், யாருடைய லுக் பெஸ்ட் என்கிற போட்டியையும் ரசிகர்கள் நடத்தி வருகின்றனர்.

டிரான்ஸ்பரன்ட் உடையில் நயன்தாரா: 40 வயதை தொட்ட நடிகை நயன்தாரா ஜிக்யூவின் இளம் இந்தியர்கள் விருது விழாவில் பங்கேற்று மாஸ் காட்டியுள்ளார். டிரான்ஸ்பரன்ட் உடையில் அவர் பங்கேற்றதை பார்த்த ரசிகர்கள் ஆடிப் போயுள்ளனர். மறுபடியும் பில்லா, ஏகன், வில்லு எஃபெக்ட்டுக்கு நயன்தாரா சென்று விட்டாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Nayanthara and Samantha latest Mumbai event photos trending and creates debate

ஸ்லீவ்லெஸ் உடையில் சமந்தா: அதே போல மும்பையில் நடைபெற்ற Elle Magazine நிகழ்ச்சியில் 36 வயதான நடிகை சமந்தா பங்கேற்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது #SamanthaRuthPrabhu எனும் ஹாஷ்டேக்குடன் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது. சமந்தா நடிப்பில் விரைவில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் சிட்டாடல் வெப்சீரிஸ் வெளியாக காத்திருக்கிறது. இந்நிலையில், விருது விழாவில் ஸ்லீவ்லெஸ் உடையை அணிந்து கொண்டு நடிகை சமந்தா பங்கேற்றது பல பிரபலங்களின் பார்வையை கவர்ந்து இருக்கிறது.

Nayanthara and Samantha latest Mumbai event photos trending and creates debate

யாரு பெஸ்ட்?: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் சமந்தா மற்றும் நயன்தாரா இணைந்து நடித்திருந்தனர். அப்பவே இருவரில் யார் பெஸ்ட் என்கிற கேள்வி எழுந்தது. சிலர் நயன்தாரா தான் என்றும் சிலர் சமந்தா தான் என்றும் சொல்லி வந்தனர். அதேபோல நேற்று மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமந்தா அணிந்து வந்த ஸ்லீவ்லெஸ் உடை பெஸ்டா? அல்லது நயன்தாராவின் பிளாக் கட் அவுட் டிரான்ஸ்பரன்ட் லுக் பெஸ்ட்டா? என ரசிகர்கள் மத்தியில் போட்டி நிலவி வருகிறது. இரண்டுமே பெஸ்ட் தான், ரசிகர்களுக்காக தொடர்ந்து தங்கள் கவர்ச்சியை தாராளமாக இருவரும் காட்டி நடித்து வருகின்றனர் என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Nayanthara and Samantha latest Mumbai event photos trending and creates debate

பாலிவுட் நடிகைகள் தான் பாவம்: கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா, சமந்தா, நயன்தாரா என பல தென்னிந்தியாவின் டாப் நடிகைகள் தற்போது பாலிவுட்டில் படையெடுத்து பட்டையை கிளப்பி வரும் நிலையில், நிஜமாகவே பாலிவுட் நடிகைகள் அய்யோ பாவம் நிலையில் இருந்து வருகின்றனர். சில முன்னணி நடிகைகளை தவிர்த்து பாலிவுட்டில் தற்போது ஹீரோயின் பஞ்சம் தலை விரித்து ஆடி வருவதை பக்காவாக புரிந்து கொண்டு தான் தென்னிந்திய நடிகைகள் பாலிவுட் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளனர் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X