சல்மானுக்கு ஜோடியா நயன்தாரா, சமந்தா நடிக்கப் போறாங்களா.. இந்த முறையாவது பார்த்து பண்ணி விடுங்க!

மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொடர்ந்து தென்னிந்தியாவில் பிரபலமான ஹீரோயின்களுடன் நடிக்க ஆரம்பித்துள்ளார். ஏற்கனவே பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தனாவுடன் அவர் இணைந்து நடித்துள்ள நிலையில், இந்த ஆண்டு நயன்தாரா மற்றும் சமந்தாவுடன் அவர் சேர்ந்து நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், விஜய், அஜித் குமார், சூர்யா உள்ளிட்ட டாப் நடிகர்களுடன் நடித்து வந்த நயன்தாராவுக்கு சமீப காலமாக பெரிய நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கவின் உடன் ஹாய் எனும் படத்திலும் சோலோவாக மூக்குத்தி அம்மன் 2 படத்திலும் நடித்து வருகிறார்.

Nayanthara and Samantha will join hands with Salman Khan for his upcoming movies
Photo Credit:

ஆனால், தெலுங்கில் சிரஞ்சீவி, மலையாளத்தில் மம்மூட்டி, மோகன்லால் நடித்து வரும் பேட்ரியாட், கன்னடத்தில் யஷ் உடன் டாக்ஸிக் என மற்றமொழிகளில் டாப் நடிகர்களுடன் தொடர்ந்து நடித்து வருகிறார்.

பாலிவுட்டில் ஷாருக்கான் உடன்: அட்லி இயக்கத்தில் பாலிவுட்டில் வெளியான ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் இந்தியில் முதல் முறையாக நயன்தாரா அறிமுகமானார். அவருக்கு அங்கே முதல் படமே 1000 கோடி வசூல் படமாக மாறியது. ஜவான் படத்திற்கு பிறகு நயன்தாராவுக்கு ஏன் பாலிவுட்டில் பெரிய வாய்ப்புகள் அமையவில்லை என்கிற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சல்மான் கான் உடன் அவர் இணைந்து நடிக்கப் போகிறார் என்கின்றனர்.

சல்மான் கான் ஜோடியாக: ஏற்கனவே தெலுங்கில் மோகன்ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்து வெளியான காட் ஃபாதர் படத்தில் நயன்தாரா நடித்திருந்தார். அந்த படத்தில் சல்மான் கான் கேமியோ ரோலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், விஜய்யை வைத்து வாரிசு படத்தை இயக்கிய வம்சி இயக்கத்தில் உருவாகவுள்ள பான் இந்தியா படத்தில் நயன்தாரா தான் ஹீரோயின் என தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் ஏப்ரல் மாதம் சல்மான் கான் படத்தில் நயன்தாரா நடிக்கப் போகிறார் என்கின்றனர்.

சல்மான் கான் உடன் சமந்தா: நயன்தாராவை தொடர்ந்து சல்மான் கான் நடிக்கவுள்ள இந்தி படத்தில் சமந்தா ஜோடியாக நடிக்கப் போகிறார் என்றும் பேச்சுக்கள் அடிபடத் தொடங்கியுள்ளன. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சல்மான் கான் மற்றும் சமந்தா இணைந்து ராஜ் நிடிமோரு இயக்கும் படத்தில் நடிக்கப் போவதாக கூறுகின்றனர். ராஜ் நிடிமோரு தான் சமந்தாவின் 2வது கணவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸை இயக்கிய ராஜ் மற்றும் டிகே இணைந்து சல்மான் கானின் பாலிவுட் படத்தையும் பிரம்மாண்டமாக இயக்கப் போவதாக கூறுகின்றனர். இந்த 2 படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X