என்னடா நடக்குது அங்க!.. நயன்தாரா, விக்னேஷ் சிவன் பார்த்த வேலை.. பாவம் புல்லாங்குழல் ஊதுபவர்!

சென்னை: விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமண நாளை முன்னிட்டு ஃப்ளூட் நவீன் புல்லாங்குழல் வாசித்த வீடியோவை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் ஷேர் செய்து ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளார். அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் படுமோசமாக கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

நயன்தாராவை நானும் ரவுடி தான் படத்தின் சூட்டிங்கில் பார்த்த போதே விக்னேஷ் சிவனுக்கு அவர் மீது காதல் உருவாகி விட்டது. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் ரகசியமாக காதலித்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 9-ஆம் தேதி அதிகாரபூர்வமாக அனைத்து சினிமா பிரபலங்களையும் அழைத்து வந்து மகாபலிபுரத்தில் உள்ள ரெசார்ட் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர்.

Nayanthara and Vignesh Shivan brutally trolled for Flute Naveen video


காதல் திருமணம்: திருமணம் செய்து கொண்ட நான்கு மாதத்தில் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்று விட்டதாக விக்னேஷ் சிவன் பதிவிட்டது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நயன்தாரா கர்ப்பம் ஆகாமல் குழந்தை எப்படி பிறந்தது என கேள்விகள் கிளம்பிய நிலையில், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டோம் என அறிவித்தனர். திருமணமாக உடனே வாடகைத் தாய் மூலமாக எப்படி குழந்தை பெற்றீர்கள் என்கிற கேள்வி எழுந்த நிலையில், ஐந்தாண்டுகளுக்கு முன்பே பத்திரப்பதிவு திருமணம் செய்து கொண்டோம் என்றும் விளக்கம் கொடுத்தனர்.

வெட்டிங் ஆனிவர்சரி: கடந்த ஆண்டு ஜூன் 9-ஆம் தேதி இருவரும் திருமண நாளை கொண்டாடிய நிலையில், அப்போது புல்லாங்குழல் கலைஞர் நவீன் என்பவரை வீட்டுக்கே அழைத்து வந்து பாட வைத்திருக்கிறார் விக்னேஷ் சிவன் அந்த வீடியோவை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

Nayanthara and Vignesh Shivan brutally trolled for Flute Naveen video

விக்கி நயன் கொஞ்சல்: நவீன் “மறுவார்த்தை பேசாதே” பாடலை தனது புல்லாங்குழல் மூலம் வாசித்துக் கொண்டிருக்கும் நிலையில், கணவரை நயன்தாரா கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து கொஞ்சும் காட்சிகளை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். அந்த பக்கம் இதெல்லாம் எதையும் கண்டுக் கொள்ளாமல் அவர் பாட்டுக்கு அவர் வந்த வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

மோசமான கமெண்ட்ஸ்: பாவம் அந்த புல்லாங்குழல் ஊதும் இசைக் கலைஞர் என்றும் கொஞ்சம் கூட கூச்சமே இல்லையா? இப்படி இன்னொருத்தரை அருகே வைத்துக் கொண்டு கட்டி அணைத்து கொஞ்சுறீங்களே என்றும் அதற்கும் மேல் மோசமாக காண்டமிருக போட்டோ தான் நினைவுக்கு வருகிறது என மோசமான கமெண்ட்டுகளை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X