கல்யாணத்துக்கா.. பட புரொமோஷனா.. நயன்தாராவின் லேட்டஸ்ட் கோயில் டூர் எங்க தெரியுமா?
Recommended Video
சென்னை: ஆர்.ஜே. பாலாஜியின் மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். பக்தி படம் என்பதால், கன்னியாகுமரியை சுற்றியுள்ள கோயில்களில் தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் ஆன்மிக சுற்றுலா சென்று வருகிறார்.
கன்னியா குமரி பகவதி அம்மன் கோயில், சுசீந்திரம் உள்ளிட்ட கோயில்களுக்கு நயன்தாரா, விக்னேஷ் சிவன் சென்று வந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில், தற்போது சுவாமி தோப்பில் உள்ள அய்யா வழி கோயிலுக்கு சென்றுள்ள புகைப்படமும் வெளியாகி வைரலாகி வருகிறது.
விரதம்
2011ம் ஆண்டு வெளியான ஸ்ரீராம ராஜ்யம் படத்திற்காக விரதம் இருந்து சீதா தேவியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார். மூக்குத்தி அம்மன் படத்திற்கும் நயன்தாரா விரதமிருந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அமெரிக்காவில் வான் கோழியுடன் நயன்தாரா போட்ட தேங்ஸ் கிவ்விங் டே வீடியோ ரசிகர்களிடையே சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

சிறந்த ஆண்டு
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு இந்த ஆண்டு பிளாக்பஸ்டர் ஆண்டாக அமைந்துள்ளது. பொங்கலுக்கு வெளியான அஜித்தின் விஸ்வாசம் மற்றும் தீபாவளிக்கு வெளியான விஜய்யின் பிகில் என இரண்டு பிளாக்பஸ்டர் படங்களிலும் நடிகை நயன்தாரா நடித்து அசத்தியிருந்தார். மேலும், வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ள தர்பார் படத்திலும் நயன் தான் நாயகி.
கல்யாணம் எப்போ?
நயன்தாரா - விக்னேஷ் சிவன் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். ஆனால், இதுவரை திருமணம் எப்போ என்ற பதிலை இருவரும் அறிவிக்கவில்லை. கோயில் கோயிலாக இருவரும் சுற்றி வருவதை பார்த்த ரசிகர்கள் திருமண தேதியை விரைவில் நயன்தாரா அறிவிப்பார் என எதிர்பார்த்து வருகின்றனர்.
ஆன்மிக சுற்றுலா
மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்து வரும் நயன்தாரா, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், சுசீந்திரம், திருச்செந்தூர் மற்றும் சாமி தோப்பில் உள்ள அய்யா வழி உள்ளிட்ட கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளார். அதன் புகைப்படங்கள் ஒவ்வொன்றாக இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.
ரசிகர்கள் உற்சாகம்
மூக்குத்தி அம்மன் பட ஷூட்டிங்கிற்காக நாகர்கோயிலில் முகாமிட்டுள்ள நடிகை நயன்தாராவை பார்க்க ரசிகர்கள் திரண்டனர். தனது கேரவனில் இருந்து இறங்கி வந்து கையசைத்து ரசிகர்களை நயன் உற்சாகப்படுத்திய வீடியோ க்ளிப்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











