வெளிநாட்டில் ஜாலியாக மகன்கள்.. பூரிப்புடன் பார்க்கும் நயன்தாரா.. வீடியோவை பாருங்க சும்மா அள்ளுது

சென்னை: நானும் ரௌடிதான் படத்தில் பணியாற்றியபோது நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலிக்க தொடங்கி சில வருடங்கள் கழித்து திருமணம் செய்துகொண்டார்கள். அவர்கள் வாடகை தாய் மூலம் இரண்டு மகன்களையும் பெற்றிருக்கிறார்கள்.மகன்களுக்கு உயிர், உலக் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்கள் தொடர்பான வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகியிருக்கிறது.

இரண்டு காதல் தோல்விகளை சந்தித்தவர் நயன்தாரா. அந்த விஷயங்கள் வெளியே வந்தபோது அத்தனை பேரும் நயனைத்தான் தரக்குறைவாக பேசினார்கள். அவரோ அதையெல்லாம் தன் தலையில் ஏற்றிக்கொள்ளாமல் தன்னுடைய வெற்றியை நோக்கி உழைத்து கொண்டிருந்தார். அதன் பலனாக அவரது இரண்டாவது இன்னிங்ஸில் படங்கள் தொடர்ச்சியாக ஹிட்டடிக்க; தமிழ்நாட்டு ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்பட்டார். இப்படிப்பட்ட சூழலில்தான் நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது அதன் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலிக்க தொடங்கினார்.

Nayanthara and Vignesh Shivan s Viral Vacation Video With Sons Wins Hearts Online
Photo Credit:

பிரமாண்டமாக நடந்த திருமணம்: காதலிக்க தொடங்கியவுடன் மேற்கொண்டு ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதற்கு ஏதுவாக ஒரே வீட்டில் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் லிவிங்கில் இருந்தார்கள். அதனையடுத்து சில வருடங்களுக்கு முன்பு மகாபலிபுரத்தில் வைத்து திருமணம் செய்துகொண்டார்கள். அந்தத் திருமணத்தில் பாலிவுட் சூப்பர் ஷாருக்கான் தொடங்கி கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்வரை ஏராளமானோர் வந்திருந்தார்கள். அதுமட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் அனாதை குழந்தைகளுக்கு அந்தத் தம்பதி அன்றைய தினம் உணவும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Also Read
அதையெல்லாம் முடிவு செய்துதான் விவாகரத்து பெற்றோம்.. ஜிவி பிரகாஷ் பற்றி மனம் திறந்த சைந்தவி
அதையெல்லாம் முடிவு செய்துதான் விவாகரத்து பெற்றோம்.. ஜிவி பிரகாஷ் பற்றி மனம் திறந்த சைந்தவி

திருமணத்துக்கு பின்பு தொடர்ந்து சர்ச்சை: விக்னேஷ் சிவனை திருமணம் செய்த கையோடு வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றார் நயன். அது அப்போதைக்கு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. பிறகு அதிகாரிகள் விசாரணை நடத்தி எந்த விதிமீறலும் இல்லை என்று உறுதி செய்த பிறகுதான் அது அடங்கியது. இரண்டு மகன்களையும் கண்ணும் கருத்துமாக பார்த்துவருகிறார் நயன்தாரா. அதேபோல் தனுஷுடனும் ஒரு பிரச்னை பூதாகரமாகி பின்னர் அடங்கியது குறிப்பிடத்தக்கது.

நடிப்பிலும் நயன் பிஸி: திருமணம் ஆகி குழந்தை பெற்றுக்கொண்டதால் நடிப்பிலிருந்து விலகுவார் என்றுதான் பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் தொடர்ந்து நடித்துவருகிறார் நயன். அவர் கையில் இப்போது டாக்சிக், மண்ணாங்கட்டி உள்ளிட்ட படங்கள் இருக்கின்றன. அதுமட்டுமின்றி வம்சி இயக்கத்தில் சல்மான் கான் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்திலும் நயன்தான் ஹீரோயின் என்றும் ஒரு பேச்சு ஓடுவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

என்ன வீடியோ?: அதாவது நயனும், விக்னேஷ் சிவனும் வருடத்துக்கு இரண்டு முறையாவது தனது மகன்களை வெளிநாட்டுக்கு அழைத்து செல்வது வழக்கம். அந்தவகையில் அண்மையில் அவர்கள் வெளிநாட்டுக்கு சென்றிருந்தபோது அவரது மகன்கள் உயிரும், உலக்கும் தோள் மேல் கை போட்டுக்கொண்டு ஜாலியாக வீதியை சுற்றி வந்தார்கள். அதனை பூரிப்போடு பார்த்துக்கொண்டே நயனும் நடந்து சென்றார். அந்த வீடியோதான் இப்போது சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X