நெற்றியில் குங்குமத்தால் நாமம் போட்ட நயன்தாரா.. வருங்கால கணவருடன் ஷீரடியில் தரிசனம்!

சென்னை: லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஷீரடி பாபா கோயிலில் தரிசனம் செய்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Recommended Video

நடுரோட்டில் Bag வாங்கிய Nayanthara வைராகும் Video | Filmibeat Tamil

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் இருவரது திருமணம் எப்போது என திரையுலகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது.

பாலிவுட்டில் ஷாருக்கான் படத்தில் நடிக்க உள்ள நயன்தாரா வட இந்தியாவில் முகாமிட்டுள்ள நிலையில், வருங்கால கணவருடன் அங்கே உள்ள பல கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி உள்ளார்.

பாலிவுட்டிலும் இனி

பாலிவுட்டிலும் இனி

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழி படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டாராக அசத்தி வரும் நடிகை நயன்தாரா அட்லி இயக்கத்தில் ஷாருக்கானின் படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ள நிலையில், வட இந்தியாவிலும் முகாமிட்டுள்ளார். தென்னிந்தியாவில் கலக்கியதை போலவே பாலிவுட்டிலும் இனி நயன்தாரா முன்னணி ஹீரோயினாக மாற உள்ளார்.

வருங்கால கணவருடன்

வருங்கால கணவருடன்

ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்ட நடிகை நயன்தாரா நிச்சயதார்த்த புகைப்படங்களை கூட சமூக வலைதளத்தில் இன்னமும் வெளியிடவில்லை. நயன்தாரா நிச்சயம் ஆனதை அறிவித்த பின்னரும் விக்னேஷ் சிவன் அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்யவில்லை. இந்நிலையில், வருங்கால கணவருடன் கோயில் கோயிலாக சுற்றி வருகிறார் நயன்தாரா.

ஷீரடியில் தரிசனம்

ஷீரடியில் தரிசனம்

பாலிவுட் படத்தின் ஷூட்டிங்கிற்காக வட இந்தியாவில் முகாமிட்டுள்ள நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவனுடன் ஷீரடியில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்களை தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து வைரலாக்கி உள்ளார்.

கோயில் கோயிலாக

கோயில் கோயிலாக

வருங்கால கணவர் விக்னேஷ் சிவன் உடன் சமீபத்தில் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நயன்தாரா கடந்த சில ஆண்டுகளாக ஏகப்பட்ட கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி உள்ளார். ஷீரடி பாபா கோயில், மும்பா தேவி, மகாலக்‌ஷ்மி கோயில், சித்தி விநாயகர் ஆலயம் என ஏகப்பட்ட கோயில்களில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

குங்குமத்தால் நாமம்

குங்குமத்தால் நாமம்

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் நெற்றியில் குங்குமத்தால் போட்ட பெரிய நாமம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தென்னிந்தியாவில் கலக்கியதை போலவே வட இந்தியாவிலும் லேடி சூப்பர் ஸ்டாராக நயன்தாரா வேற லெவலில் மிரட்டப் போகிறார் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

அந்த படம் ஓவர்

அந்த படம் ஓவர்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சமந்தா மற்றும் நயன்தாரா நடித்து வந்த காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று விட்டதாகவும் படம் விரைவில் ஒடிடி ரிலீசாக வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X