அனுமதியே கேட்காமல் அத்துமீறல்.. செம காண்டான நயன்தாரா.. என்ன செஞ்சாங்க தெரியுமா?

சென்னை: தமிழ் சினிமா ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படுபவர் நயன்தாரா. அவர் தன்னை அப்படி அழைக்க வேண்டாம் என்று கூறினாலும் ரசிகர்கள் அன்பின் மிகுதியால் அப்படித்தான் விளித்துவருகிறார்கள். அடுத்ததாக நயன் நடிப்பில் டாக்சிக் திரைப்படம் வரவிருக்கிறது. அது தவிர்த்து தமிழில் ராக்காயி, மண்ணாங்கட்டி, ஹாய் உள்ளிட்ட படங்களும் வருகின்றன. இந்நிலையில் சிலர் அத்துமீறி ஒரு செயலை செய்ததால் அவர் செம கடுப்பான வீடியோ சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

கோலிவுட்டுக்கு வந்து குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாக மாறிய நயன்தாரா மொத்தம் இரண்டு காதல் தோல்விகளை சந்தித்தார். அதனையடுத்து நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது அதன் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலிக்க தொடங்கினார். இரண்டு பேரும் சில வருடங்கள் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து ஒருவரையொருவர் புரிந்துகொண்டு சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்கள். அவர்கள் வாடகை தாய் மூலம் இரண்டு மகன்களையும் பெற்றெடுத்தார்கள்.

Nayanthara Angry Video Goes Viral Actress Reacts to Fans Recording Without Permission
Photo Credit:

சினிமாவில் பிஸி: திருமணத்துக்கு பிறகு பல நடிகைகள் சினிமாவிலிருந்து ஒதுங்கத்தான் பார்ப்பார்கள். அப்படித்தான் பலர் செய்திருக்கிறார்கள். ஆனால் நயனோ நடிப்புக்கு முழுக்கு போடுவதை ஓரங்கட்டி வைத்துவிட்டார். அவரது முடிவுக்கு கணவர் விக்னேஷ் சிவனும் முழு ஆதரவை கொடுத்தார். அதன் காரணமாக தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்துவருகிறார். இருந்தாலும் பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. இன்னும் ஓபனாக சொல்ல வேண்டுமென்றால் அவரது மார்க்கெட் கொஞ்சம் டல்லடிக்க தொடங்கிவிட்டதாகவும் ஒரு பேச்சு ஓடுகிறது. அதேசமயம் முழுவதும் மார்க்கெட்டை இழக்கவில்லை. சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்கவும் கமிட்டாகிவிட்டார்.

Also Read
சங்கீதாவை வைத்து அவதூறு.. ஓபனாக பேசிய விஜய்.. ஜனநாயகன் முதல் இத்தனை சிக்கலா தளபதிக்கு?
சங்கீதாவை வைத்து அவதூறு.. ஓபனாக பேசிய விஜய்.. ஜனநாயகன் முதல் இத்தனை சிக்கலா தளபதிக்கு?

நடவடிக்கையில் மாற்றம்: அதேபோல் நயனின் நடவடிக்கைகளில் ஏகப்பட்ட மாற்றங்கள் தெரிகின்றன. முன்பெல்லாம் படத்தின் ப்ரோமோஷன்களில் எல்லாம் அவர் கலந்துகொள்ளமாட்டார். என்னுடைய வேலை நடிப்பது மட்டும்தான் என்று அக்ரீமென்ட்டும் போட்டுவிடுவார். அது பலரிடம் கண்டனத்தை சந்தித்தது. சூழல் இப்படி இருக்க ஷாருக்கானுக்கு ஜோடியாக அட்லீ இயக்கத்தில் ஜவாஅன் படத்தில் நடித்தார். அப்போதிருந்து சோஷியல் மீடியாவில் தனக்கென தனி அக்கவுண்ட்டை ஆரம்பித்து அதில் ப்ரோமோஷனையும் செய்ய ஆரம்பித்து ஆச்சரியத்தை கொடுத்தார்.

ஓடோடி வந்த நயன்: அதேபோல் எந்த ஆடியோ வெளியீட்டு விழாவிலும் அவரை பார்க்க முடியாது. ரொம்பவே நெருக்கமாக இருந்தால் மட்டும்தான் அவர் வருவார். தற்போது இயக்குநரும், அவரது கணவருமான விக்னேஷ் சிவன் எல்ஐகே படத்தை இயக்கி முடித்திருக்கிறார். நாளை மறுநாள் படமானது ரிலீஸாகவிருக்கிறது. இதன் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. அதில் யாருமே எதிர்பார்க்காத வகையில் நயன்தாரா கலந்துகொண்டார். ரொம்பவே சிம்ப்பிளாக கருப்பு டீ ஷர்ட், கருப்பு பேண்ட் அணிந்து வந்திருந்தார். அவர் அரங்கத்துக்குள் வந்ததும் ரசிகர்கள் கரவொலிகளால் அதிர வைத்தார்கள்.

ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் நயன்தாரா தொடர்பான வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. அதாவது ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அவர் வந்தார். அப்போது அங்கிருக்கும் சிலர் அத்துமீறி நயனை வீடியோ எடுத்தார்கள். அவருக்கு பாதுகாப்புக்கு வந்தவர்கள் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. ஒருகட்டத்தில் கடுப்பான நயன்தாரா வந்த வழியிலேயே நின்றுவிட்டார். பிறகு வீடியோ எடுத்தவர்கள் தங்கள் மொபைல் ஃபோனை உள்ளே வைத்த பிறகுதான் நடக்க ஆரம்பித்தார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் மேடம் செம கடுப்பாகிட்டாங்கள் என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X