ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யும் நயன்தாரா, அனுஷ்கா

By Mayura Akilan

சென்னை: பிரபல நrடிகைகளான அனுஷ்கா, நயன்தாரா, நமீதா ஆகியோர் தோட்டம், வீடுகள், மனைகளாக வாங்கி குவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதை தமிழ் திரையுலக கதாநாயகிகள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகின்றனர். தங்களின் சம்பாத்தியம் முழுவதையும் அசையா சொத்துக்களிலும் காலி மனைகளிலும் பத்திரமாக முதலீடு செய்கிறார்கள்.

இதற்கு காரணமாக அவர்கள் கூறுவது, சாவித்திரி, காஞ்சனா வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொண்ட பாடம்தான் என்கின்றனர்.

சாவித்திரி

சாவித்திரி

சாவித்திரி 1950 மற்றும் 60-களில் நிறைய படங்களில் நடித்தார். முன்னணி கதாநாயகியாக நடித்தவர். மிகப் பெரிய ஹீரோக்கள் ஜோடியாக நடித்து லட்சம் லட்சமாய் சம்பாதித்தார். ஆனால் சாவித்திரியின் கடைசி காலத்தில் சொத்தெல்லாம் கைவிட்டு போனது. எல்லாவற்றையும் இழந்து வறுமையில் வாடி இறந்தார்.

காஞ்சனா

காஞ்சனா

அதுபோல் 60களில் காஞ்சனாவும் மிகப்பெரிய நடிகைதான். லட்சம் லட்சமாக சம்பாதித்து சொத்து சேர்த்தார். ஆனால் உறவினர்களால் ஏமாற்றப்பட்டு தற்போது சொத்துக்கள் அனைத்தையும் இழந்து நிற்கிறார்.

பத்திரமான முதலீடு

பத்திரமான முதலீடு

கடந்த கால நடிகைகளைப் போல இல்லாமல் இப்போதைய நடிகைகள் பத்திரமாக பணத்தை பாதுகாக்கின்றனர். வருமானம் வரும் தொழில்களில் அவற்றை முதலீடும் செய்கிறார்கள். நடிகைகள் ஒரு படத்தில் 3 மாதங்களில் நடித்து முடித்து விடுகிறார்கள்.

நயன்தாரா

நயன்தாரா

இதில் முன்னணி நடிகையான நயன்தாரா, ரூ.1.5 கோடி வரை சம்பளம் பெறுகிறார். நயன்தாரா தனது வருமானத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்கிறார். கேரளாவில் நிறைய விவசாய நிலங்கள் மற்றும் வீடுகள் வாங்கி போட்டுள்ளாராம்.

திரிஷா- சினேகா

திரிஷா- சினேகா

திரிஷா ஆந்திராவில் ஓட்டல் கட்டி வருகிறாராம். அது தவிர நிறைய வீடுகளும் வாங்கிப் போட்டுள்ளார். சினேகா திருமண மண்டபம் கட்டியுள்ளார்.

ஐதராபாத்தில் அனுஷ்கா

ஐதராபாத்தில் அனுஷ்கா

அனுஷ்காவும் ஐதராபாத்தில் ரியல் எஸ்டேட்டில் பணத்தை முதலீடு செய்கிறார்..

நமீதா - சிம்ரன்

நமீதா - சிம்ரன்

நமீதா சூரத்தில் பிரபல கட்டுமான நிறுவனத்துடன் பங்குதாரராக இணைந்து குடியிருப்புகளை கட்டி விற்கிறார்.

சிம்ரன் சம்பாதித்த பணத்தில் டி.வி. தொடர்கள் எடுக்க தயாராகிறார்.

இலியானா- ஹன்சிகா

இலியானா- ஹன்சிகா

இலியானா ஐதராபாத்தில் ஷாப்பிங் காம்ப்ளக்சில் கடைகள் வாங்கி துணி வியாபாரம் செய்கிறார். ஹன்சிகா, டாப்சி போன்றோரும் காலி மனைகளில் முதலீடு செய்கிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X