ஆந்திராவிலிருந்து வரும் 'ரிப்போர்ட்டர்' நயன்தாரா!
இதுவரை தமிழில் செய்தியாளர்கள் பெயரில்தான் படம் வராமல் இருந்தது.
இப்போது அந்தக் குறையையும் தீர்த்து வைத்துள்ளது நயன்தாரா நடித்து வரும் ரிப்போர்ட்டர்.
தெலுங்கில் வெளியான ஆஞ்சநேயலு படம்தான், தமிழில் ரிப்போர்ட்டராக வெளியாகிறது.

பழிவாங்கல்
பல கோடி ரூபாய் ஊழல் செய்யும் ஒரு அமைச்சரை அம்பலப்படுத்துகிறார் நிருபர் ஒருவர். இதனால் அந்த நிருபரைக் கொன்றுவிடுகிறார் அமைச்சர். அவரின் குடும்பமே தீர்த்துக்கட்டப்படுகிறது. வெகுண்டெழும் ஹீரோ, நயன்தாராவுடன் இணைந்து பழிவாங்குவதுதான் ரிப்போர்ட்டரின் கதை.

ரவி தேஜா
இந்தப் படத்தில் ரிப்போர்ட்டர் வேடத்தில் அதிரடியாக நடித்துள்ளார் நயன்தாரா. ரவி தேஜா ஹீரோவாக நடித்துள்ளார். அவருடன் பிரகாஷ்ராஜ், சுமன், ஜெயப்பிரகாஷ், கோட்டா சீனிவாசராவ், காதல் தண்டபாணி என பலரும் நடித்துள்ளனர்.

நயன்தாராவின் அமோக கவர்ச்சி
இந்தப் படத்தில் நயன்தாரா ஏகத்துக்கும் கவர்ச்சியாக நடித்துள்ளார். அவரை குனியவைத்து, நிமிர வைத்து, ஓடவிட்டு கவர்ச்சிக் காட்சிகளை படமாக்கியுள்ளனர்.

கவர்ச்சிக்கு மவுசு
அந்த ஸ்டில்களைத்தான் இங்கே பார்க்கிறீர்கள். நயன்தாராவின் கவர்ச்சிக்கு ஏக மவுசு இருப்பதால் அந்தப் படத்தை மூன்று வருடங்களுக்குப் பிறகு தமிழுக்குக் கொண்டு வருகிறார்கள்.

இந்தியில்..
இந்தப் படம் இந்தியிலும் டப் செய்யப்பட்டது. ஷெர் தில் என்ற பெயரில் அந்தப் படம் வெளியானது.

தமன் இசையில்
பரசுராம் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். பிரிமியர் பிலிம்ஸ் சார்பில் கே ரவிசங்கர் வெளியிடுகிறார்.


Click it and Unblock the Notifications











