பாஸ்கர் தி ராஸ்கல்: மீண்டும் மலையாளத்தில் நயன்தாரா.. மம்முட்டிக்கு ஜோடி!
தென்னிந்திய சினிமாவின் அசைக்க முடியாத நம்பர் ஒன் நாயகியாகத் திகழும் நயன்தாரா, மீண்டும் தன் தாய்மொழியான மலையாளத்தில் படம் நடிக்கிறார்.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் நடிக்கும் இந்த மலையாளப் படத்தின் நாயகன் மம்முட்டி. பாஸ்கர் தி ராஸ்கல் என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தை சித்திக் இயக்குகிறார்.
தெலுங்கு மற்றும் தமிழில் நயன்தாரா பிஸியாக இருந்தாலும், நல்ல வாய்ப்புகள் வரும்போது மலையாளத்தில் நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். சொந்த தாய்மொழிப் படம் என்பதால் சம்பளம் பற்றி கவலைப்படுவதில்லை.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நயன்தாரா மலையாளத்தில் நடித்த படம் பாடிகார்டு. சித்திக்தான் இயக்குநர். அந்தப் படம் தமிழில் காவலனாக வந்தது. தெலுங்கு மற்றும் இந்தியில் பாடிகார்டு என்ற பெயரிலேயே வெளியாகி வெற்றி பெற்றது.
அந்தப் படத்துக்குப் பிறகு இப்போதுதான் மலையாளத்தில் நடிக்கிறார் நயன்தாரா.
சித்திக் சொன்ன கதை ரொம்பப் பிடித்துவிட்டதால் உடனடியாக ஒப்புக் கொண்டாராம்.
நயன்தாராவும் மம்முட்டியும் இணைந்து நடித்த முதல் படம் ராப்பகல். பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன்பிறகு 10 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் இணைகின்றனர். பாஸ்கர் தி ராஸ்கல் படப்பிடிப்பு வரும் ஜனவரியில் தொடங்குகிறது!


Click it and Unblock the Notifications











