நயன்தாராவின் அடுத்த டார்கெட் ஜெயம் பிரதர்ஸ்!
சென்னை: சிம்பு, தனுஷ், பிரபு தேவா, ஆர்யா... இப்படி யாருடன் நயன்தாரா இணைந்தாலும் அவர்கள் பெயர் பரபரப்பாகிவிடும் (நாறிப் போகும் என்பதன் நாகரீக சொல்!). அவரிடம் அப்படியொரு ஃபயர்!
இதில் சாமர்த்தியமாக தப்பிய சிலர் அஜீத், விஜய் மற்றும் சூர்யா...

குறையல மவுசு
இருந்தாலும் நயனுக்கு ரசிகர்களிடம் மவுசு இன்னும் குறையாத மாதிரி ஒரு தோற்றம் இருப்பதால், அறிமுக நாயகனும் அவரைக் கேட்கிறார்... பிரபல நாயகனும் தன் படத்துக்காக அவரிடம் போய் நிற்கிறார்.

அஜீத்- உதயநிதியுடன்
ஒரு பட வெற்றி ஹீரோ உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டே, டாப் ஹீரோக்களில் ஒருவரான அஜீத்துடனும் அவர் டூயட் பாடிக் கொண்டிருக்கிறார். தெலுங்கில் வயதான ஹீரோக்களே தொடர்ந்து நயன்தாராவின் கால்ஷீட்டை பெரும் விலைக்குக் கேட்பதால், அங்கு கவனத்தைக் குறைத்துக் கொண்டு, தமிழில் மேலும் புதிய படங்களுக்கு கால்ஷீட் தர ஆரம்பித்துள்ளார்.

முதல்முறையாக ஜெயம் ரவியுடன்
இதுவரை தான் ஜோடி சேராத முன்னணி நடிகரான ஜெயம் ரவி மற்றும் இயக்குநர் ஜெயம் ராஜாவுக்கு தன் கால்ஷீட்டை மொத்தமாக வழங்கியுள்ளார் நயன்தாரா. ஜெயம் பிரதர்ஸை வைத்து கல்பாத்தி அகோரம் தயாரிக்கும் புதிய படத்துக்கு தான் ஹீரோயினாக ஒப்பந்தமானது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் நயன்தாரா.

லிங்குசாமி படத்திலும்
இன்னொரு பக்கம், லிங்குசாமியின் நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய படத்துக்கும் நயன்தாராவிடம் பேசி வருகின்றனர். லிங்கு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் முதலில் நடிக்கக் கேட்டது நயனிடம்தானாம்!


Click it and Unblock the Notifications











