அட செம க்யூட் போங்க.. பரபரப்புக்கு இடையே நயன்தாரா பிறந்தநாள் கேக் வெட்டிய இடத்தை பாருங்க

சென்னை: நடிகை நயன்தாரா கோலிவுட்டின் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்துவருகிறார். அவர் இதுவரை 75 படங்களில் நடித்திருக்கிறார். இப்போது மண்ணாங்கட்டி படத்தை தமிழில் முடித்திருக்கிறார். மேலும் ஒரு மலையாள படத்திலும் நடிக்கிறார். இவை தவிர்த்து ஹிந்தியிலும் அவருக்கு சில வாய்ப்புகள் கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில் அவர் நேற்று தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடனார். அதனையொட்டி அவரைப் பற்றிய ஆவண படம் ஒன்றும் நேற்று ரிலீஸானது.

கேரளாவில் பிறந்தவர் மரியம் டயானா. தமிழில் ஐயா படத்தில் நயன்தாரா என்ற பெயரோடு அறிமுகமானார். ஹரி இயக்கத்தில் உருவாகியிருந்த அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. நயனின் அழகும் திறமையும் கோலிவுட்டை கவர்ந்ததை அடுத்து அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தன. குறுகிய காலத்திலேயே ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். அந்தப் படமும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதையடுத்து நயனின் கரியரில் வாய்ப்பு மழை பொழிந்தது.

nayanthara birthday tamil cinema kollywood

முன்னணி நடிகை: அதன்படி விஜய், அஜித், சூர்யா, சிம்பு, தனுஷ் என தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். குறிப்பாக கிளாமர் ரோல்களை எந்தவித தயக்கமுமின்றி செய்ததன் காரணமாக அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது. சூழல் இப்படி இருக்க அவரது வாழ்க்கையில் சில பிரச்னைகள் வந்ததைத் தொடர்ந்து நடிப்பிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். பிறகு ராஜா ராணி, அறம், நானும் ரௌடிதான் என தனது செகண்ட் இன்னிங்ஸை ஃபுல் பார்மோடு தொடங்கினார்.

திருமணம்: நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது அதன் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலிக்க ஆரம்பித்த நயன்; பல வருடங்கள் லிவிங் டூ கெதரில் இருந்துவிட்டு சில வருடங்களுக்கு முன்பு விக்னேஷை திருமணம் செய்துகொண்டார். திருமணம் செய்த கையோடு வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளையும் பெற்றெடுத்தார். அவர்களது திருமண வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருக்கிறது. அவர் அடுத்ததாக ராக்காயி, மண்ணாங்கட்டி உள்ளிட்ட படங்களில் கமிட்டாகியிருக்கிறார்.

நயன் பிறந்தநாள்: இந்நிலையில் நேற்று அவர் தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அதனையொட்டி அவரது பெர்சனல் வாழ்க்கை, சினிமா கரியர் தொடர்பான Nayanthara Beyond The Fairy Tale என்ற ஆவணப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது. அதனைப் பார்த்த ரசிகர்கள் தங்களது கலவையான விமர்சனங்களையே கொடுத்தார்கள். அதேசமயம் நயன் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களும், தனது முந்தைய காதல் தோல்விகள் பற்றி அவர் பேசியதும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது.

பிறந்தநாள் கொண்டாட்டம்: மேலும் அந்த ஆவணப் படத்துக்காக நானும் ரௌடிதான் காட்சிகள் விஷயத்தில் நயனுக்கும், தனுஷுக்கும் பிரச்னையும் ஏற்பட்டது பெரும் பரபரப்பை உருவாக்கியது. இந்நிலையில் நயன்தாரா பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பான வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. அதாவது அவரும், விக்னேஷ் சிவனும் டெல்லி ஏர்போர்ட்டில் சென்றுகொண்டிருக்கையில் அவரது ரசிகர் ஒருவர் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்ட சொல்லி வேண்டினார். அதன்படி ரசிகர் கொண்டு வந்த கேக்கை வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார் நயன். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அட செம க்யூட்டா இருக்காங்களே நயன் என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X