ஹேப்பி பர்த்டே மோல்.. நயன்தாராவின் பிறந்தநாளை வேற லெவலில் கொண்டாடிய விக்னேஷ் சிவன்!

சென்னை: லேடி சூப்பர்ஸ்டார் என செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை நயன்தாராவின் 37வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், இன்று இரவே தனது வருங்கால மனைவிக்கு ஏகப்பட்ட கேக்குகளை வாங்கி அடுக்கி பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஆரம்பித்துள்ளார் விக்னேஷ் சிவன்.

மேலும், நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை சூப்பரான கிஃப்ட் ஒன்றையும் கொடுக்கப்போவதாக அறிவித்து ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.

நயனுக்கு பர்த்டே

நயனுக்கு பர்த்டே

1984 நவம்பர் 18ம் தேதி கேரளாவின் திருவல்லாவில் பிறந்த டயானா மரியம் குரியன் சினிமாவில் நயன்தாராவாக மாறி கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேல் லேடி சூப்பர்ஸ்டாராக அசத்தி வருகிறார். நாளை நயன்தாராவின் 37வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தற்போதே காதலருடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள நயன்தாராவின் பர்த்டே பிக்ஸ் வெளியாகி வைரலாகி வருகிறது.

வருங்கால கணவருடன்

வருங்கால கணவருடன்

இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நடிகை நயன்தாராவுக்கும் நிச்சயம் ஆகி விட்ட நிலையில், விரைவில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 6 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வரும் இருவரும் ஒவ்வொரு ஆண்டும் பிறந்தநாள் கொண்டாட்டங்களை மாறி மாறி கொண்டாடி வருகின்றனர்.

எத்தனை கேக்

எத்தனை கேக்

ஒரு பெரிய கேக் மற்றும் 4 குட்டி கேக்குகளுக்கு மத்தியில் கிளிட்டர் உடையில் செம க்யூட்டாக நடிகை நயன்தாரா நிற்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நயன்தாரா பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில் ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்த தொடங்கி விட்டனர்.

ஹேப்பி பர்த்டே மோல்

ஹேப்பி பர்த்டே மோல்

Happy Birthday Mol என பர்த்டே பலூனிலும் கேக்கிலும் இயக்குநர் விக்னேஷ் சிவன் குறிப்பிட்டு இருப்பதை பார்த்த ரசிகர்கள் நயனை இப்படித்தான் செல்லப் பெயர் வைத்து விக்னேஷ் சிவன் அழைத்து வருகிறார் என்பது தெளிவாகி விட்டதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

பர்த்டே கிஃப்ட்

பர்த்டே கிஃப்ட்

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் அடுத்த பட அறிவிப்பு நாளை அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என இயக்குநர் விக்னேஷ் சிவன் சூப்பர் கிஃப்ட் கொடுக்க காத்திருக்கிறார். ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் பேய் படமாக உருவாக உள்ள அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் இயக்குநர் உள்ளிட்ட அறிவிப்புகள் நாளை வெளியாக உள்ளது.

பேய் படம்

பேய் படம்

மாயா, டோரா உள்ளிட்ட பேய் படங்களில் நடித்து வந்த நயன்தாரா மீண்டும் ஒரு பேய் படத்தில் நடிக்க உள்ளார். விக்னேஷ் சிவனின் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் கண்மணியாக நடித்து வரும் நயன்தாரா அடுத்ததாக ஹாரர் படத்தில் நடிக்கப் போவது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X