மும்பையில் நயன்தாரா.. மேடத்தோட பிளானே வேறயாம்.. அதற்கு அடி போடுறாங்களோ
சென்னை: நானும் ரௌடிதான் படத்தில் பணியாற்றியபோது நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலிக்க தொடங்கி சில வருடங்கள் கழித்து திருமணம் செய்துகொண்டார்கள். இரண்டு மகன்களை வாடகை தாய் மூலம் பெற்றுக்கொண்ட நயன் தற்போதும் நடிப்பில் பிஸியாக இருக்கிறார். ஏற்கனவே ஜவான் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்திருந்த அவர்; இப்போது சல்மான் கானுக்கு ஜோடியாக வம்சி இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவில் நுழைந்த புதிதில் சிம்புவையும், பிறகு பிரபுதேவாவையும் காதலித்து பிரேக் அப் செய்தார் நயன்தாரா. தொடர்ச்சியாக இரண்டு காதல் தோல்விகள் ஏற்பட்டதால் இனிமேல் அவர் சிங்கிளாகத்தான் இருப்பாரோ என்றுதான் பலரும் நினைத்தார்கள். ஆனால் நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது அதன் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்தார். இரண்டு பேரும் காதலிக்கும்போது ஒரே வீட்டில் 5 வருடங்கள்வரை லிவிங் டு கெதரில் இருந்தார்கள். அப்படி இருந்தது அவர்களுக்குள்ளான புரிதலை மேலும் வலுப்படுத்தியது.

திருமணம்: இந்த ரிலேஷன்ஷிப்பை திருமணத்துக்கு கொண்டு சென்றால் நீடிக்கும் என்ற நம்பிக்கை வந்த பிறகு சில வருடங்களுக்கு முன்பு மகாபலிபுரத்தில் வைத்து திருமணம் செய்துகொண்டார்கள். அந்தத் திருமணத்தில் பாலிவுட் சூப்பர் ஷாருக்கான் தொடங்கி கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்வரை ஏராளமானோர் வந்திருந்தார்கள். அதுமட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் அனாதை குழந்தைகளுக்கு அந்தத் தம்பதி அன்றைய தினம் உணவும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
வாடகை தாய் மூலம் குழந்தைகள்: திருமணம் ஆன கையோடு வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றார் நயன். அது அப்போதைக்கு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. பிறகு அதிகாரிகள் விசாரணை நடத்தி எந்த விதிமீறலும் இல்லை என்று உறுதி செய்த பிறகுதான் அது அடங்கியது. இரண்டு மகன்களையும் கண்ணும் கருத்துமாக பார்த்துவருகிறார் நயன்தாரா. அவருக்கு விக்னேஷும் சப்போர்ட் செய்துவருகிறார்.
நடிப்பிலும் பிஸி: திருமணம் ஆகி குழந்தை பெற்றுக்கொண்டதால் நடிப்பிலிருந்து விலகுவார் என்றுதான் பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் தொடர்ந்து நடித்துவருகிறார் நயன். அவர் கையில் இப்போது டாக்சிக், மண்ணாங்கட்டி, ராக்காயி, ஹாய் உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன. இவற்றில் டாக்சிக் படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. நிச்சயம் அவர் நடித்திருக்கும் அனைத்து படங்களுமே நயனுக்கு பெரிய வெற்றியை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் லேடி சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்.
மும்பையில் நயன்: இதற்கிடையே அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து ஹிந்தியில் என்ட்ரி கொடுத்தார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. எனவே பாலிவுட்டில் அதிக கவனத்தை செலுத்த முடிவு செய்து அதன்படி செயல்பட்டார். அதன் பலனாக வம்சி இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கவிருக்கும் படத்தில் ஹீரோயினாக கமிட்டாகியிருக்கிறார். இந்நிலையில் நயனை இப்போது அடிக்கடி மும்பையில் பார்க்க முடிகிறது. மாதத்துக்கு இரண்டு தடவையாவது அங்கே செல்லும் அவர் நிறைய ஹிந்தி படங்களுக்கான கதைகளை கேட்டுவருவதாக சொல்லப்படுகிறது. அந்தவகையில் சமீபத்தில் அவர் மும்பையில் கேஷுவலாக நடந்து சென்ற வீடியோ ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications