ஜாகுவார் கார் வாங்கிய நயன்தாரா: டிரைவர் யார் தெரியுமோ?

By Siva

Recommended Video

ஜாகுவார் காரில் சென்று விக்கியுடன் 2.0 படம் பார்த்த நயன்தாரா- வீடியோ

சென்னை: நயன்தாரா ஜாகுவார் கார் வாங்கியுள்ளாராம்.

கோலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளவர் நயன்தாரா. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வந்த அவர் தற்போது ரூட்டை மாற்றியுள்ளார்.

அதாவது பெரிய ஹீரோக்களின் படங்களில் கூட நடிக்கத் துவங்கிவிட்டார்.

ஜாகுவார்

ஜாகுவார்

நயன்தாரா விலை உயர்ந்த ஜாகுவார் கார் வாங்கியுள்ளாராம். அவர் வாங்கும் சம்பளத்திற்கு ஜாகுவார் எல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அம்மணி ஒரு படத்தில் நடிக்க ரூ. 5 கோடி கேட்கிறாராம். அவருக்கு என்று பெரிய மார்க்கெட் இருப்பதால் தயாரிப்பாளர்களும் சிரித்த முகமாக பணத்தை கொடுக்கிறார்களாம்.

விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன்

நயன்தாரா சென்னை நகரில் ஜாகுவார் பயன்படுத்துகிறாராம், வெளியூர் படப்பிடிப்புகளுக்கு பி.எம்.டபுள்யூ. காரில் செல்கிறாராம். நயன்தாரா வெளியூர்களுக்கு சென்றால் அவருக்கு கார் டிரைவராக மாறிவிடுகிறாராம் அவரின் காதலர் விக்னேஷ் சிவன். நயன்தாரா மீதுள்ள பாசத்தால் டிரைவராக செல்கிறார்.

அக்கறை

அக்கறை

நயன்தாராவுக்காக கார் ஓட்டுவது மட்டும் அல்ல அவருக்காக கதை கேட்கும் வேலையையும் செய்து வருகிறார் விக்னேஷ் சிவன். நயன்தாரா மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று அவருக்கு பிடித்தவற்றை பார்த்து பார்த்து செய்கிறார் விக்னேஷ். அதனால் தான் விக்னேஷ் சிவனுடன் இருக்கும் போது நயன்தாராவின் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி தெரிகிறது.

திருமணம்

திருமணம்

நயன்தாராவை மகிழ்ச்சியாக வைத்திருப்பது எல்லாம் சரி, அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கூறி வருகிறார்கள் லேடி சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள். அவர்களின் கவலையும் நியாயமானது தானே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X