நயன்தாரா பீச்சில் பட்டாசு வெடித்து எப்படி கொண்டாடுறாரு பாருங்க.. அடடே மகன் பேச ஆரம்பிச்சிட்டாரே!

சென்னை: பொதுமக்களை போலவே சினிமா பிரபலங்களும் தீபாவளி பண்டிகையை பட்டாசு வெடித்துக் கொண்டாடிய காட்சிகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். நிவேதா பெத்துராஜ் செம மாஸாக பட்டாசு வெடித்த காட்சிகளை நேற்று வெளியிட்டு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்களுடன் கடற்கரையில் பட்டாசு வெடித்துக் கொண்டாடிய வீடியோவை சற்றுமுன் வெளியிட்டு ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

nayanthara diwali 2024 vignesh shivan 2024

நடிகை நயன்தாரா கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை மற்றும் தீபாவளி என அனைத்து இந்து பண்டிகைகளுக்கும் தனது குழந்தைகளுடன் இந்த ஆண்டு கொண்டாடிய புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பீச்சில் தீபாவளி கொண்டாட்டம்: நடிகை நயன்தாரா இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை கடற்கரையில் தனது குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். இரவு நேரத்தில் பீச்சுக்கு சென்று பட்டாசுகளை வெடித்து தனது மகன்களை சந்தோஷத்தில் ஆழ்த்திய வீடியோவை சற்றுமுன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைத்து வருகிறார்.

நயன்தாராவுக்கும் பயமா?: புஸ்வானம் வைத்து விட்டு நடிகை நயன்தாரா கேமரா எடுத்துக் கொண்டிருப்பவர் அருகே ஓடிவரும் காட்சிகளை பார்த்து விட்டு நயன்தாராவுக்கும் பட்டாசு என்றால் பயம் தான் போல தெரிகிறதே என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

மகன் சொன்ன வார்த்தை: அப்பா விக்னேஷ் சிவன் அசால்ட்டாக பட்டாசுகளை வெடிப்பதை பார்த்து ஹேப்பியான மகன் டப் டப் என பட்டாசு வெடிக்குது என பேசுவதை கேட்ட ரசிகர்கள் நயன்தாராவின் மகனின் மழலைப் பேச்சு சூப்பரா இருக்கே என வாழ்த்தி வருகின்றனர்.

லவ் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு வெயிட்டிங்: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே. சூர்யா, சீமான், க்ரித்தி ஷெட்டி நடித்துள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த படத்துக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அஜித் படம் மிஸ்ஸான நிலையில், விக்னேஷ் சிவன் இந்த படத்தை எப்படி இயக்கியுள்ளார் என்பதை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

நயன்தாரா டாக்குமென்டரி: வரும் நவம்பர் 18ம் தேதி நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது வாழ்க்கை தொடர்பான ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது. நயன்தாராவின் பிரைவேட் வாழ்க்கை, அவர் வாழ்க்கையில் சந்தித்த கஷ்டங்கள், வெற்றிகள், திருமணம் என அனைத்துமே அந்த ஆவணப்படத்தில் இருக்கும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X