நந்தமூரி ராஜ்ஜியத்தில் ராணியாக மாறிய நயன்தாரா.. பர்த்டேவுக்கு பாலகிருஷ்ணா கொடுத்த சூப்பர் கிப்ட்!

ஹைதராபாத்: நந்தமூரி பாலகிருஷ்ணா - கோபிசந்த் மலினேனி கூட்டணியில் உருவாகும் #NBK111 திரைப்படத்தில் நடிகை நயன்தாரா கதாநாயகியாக இணைந்துள்ளார். வெங்கட சதீஷ் கிலாரு மற்றும் விருத்தி சினிமாஸ் இணைந்து தயாரிக்கும் இந்த பிரம்மாண்ட வரலாற்றுப் படத்தில் நடிகை நயன்தாரா ராணியாக நுழைந்துள்ளார் என நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு சூப்பரான பரிசை படக்குழு வழங்கியுள்ளது.

தொடர்ச்சியான வெற்றிப் படங்களால் ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற நந்தமூரி பாலகிருஷ்ணா, 'வீரசிம்ஹாரெட்டி' வெற்றிக்குப் பிறகு இயக்குநர் கோபிசந்த் மலினேனியுடன் மீண்டும் இணைகிறார். இந்தப் புதிய திரைப்படம் ஒரு மகத்தான வரலாற்றுப் படைப்பாக உருவாகி வருகிறது. இதன் தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு, ராம்சரண், ஜான்வி கபூர் நடித்து வரும் பான்-இந்திய திரைப்படமான "பெத்தி"யையும் தயாரித்து வருகிறார்.

Nayanthara Comes On Board For Nandamuri Balakrishna s NBK111

நடிகை நயன்தாரா தனது அழகு மற்றும் கம்பீரத்துடன் இந்தப் படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக, வலுவான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது 'சிம்ஹா', 'ஜெய் சிம்ஹா', 'ஸ்ரீ ராம ராஜ்யம்' ஆகிய படங்களுக்குப் பிறகு பாலகிருஷ்ணா - நயன்தாரா இணையும் நான்காவது படமாகும். இந்த அறிவிப்பு நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது.

ராணியாக நயன்தாரா: படத்தின் அறிவிப்பு வீடியோ கண்கவர் காட்சிகளுடன், திரைப்படத்தின் பிரம்மாண்டத்தை உணர்த்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் கோபிசந்த் மலினேனி, வரலாற்று ராணியாக குதிரையில் வரும் நயன்தாராவை அறிமுகப்படுத்தி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார். இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

மீண்டும் பாலகிருஷ்ணாவுடன்: கோபிசந்த் மலினேனி முதன்முறையாக ஒரு வரலாற்றுப் படத்தை இயக்கி வருகிறார். தனது வழக்கமான மாஸ் பாணியை இந்தப் பிரம்மாண்ட படைப்பிலும் அவர் கொண்டு வரவுள்ளார். இதுவரை காணாத புதிய கதாபாத்திரத்தில் பாலகிருஷ்ணாவை வடிவமைத்து, உணர்வுப்பூர்வமான மற்றும் ஆக்‌ஷன் கலந்த ஒரு வரலாற்று அனுபவத்தை பிரம்மாண்ட காட்சிகளுடன் இந்தப் படம் வழங்கவுள்ளது. படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

மூக்குத்தி அம்மன் 2: நடிகை நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் இருந்து எந்தவொரு அப்டேட்டையும் சுந்தர். சி ஏன் வெளியிடவில்லை என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அடுத்தடுத்து பிரம்மாண்ட பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. யஷ் நடித்து வரும் டாக்ஸிக் படத்திலும் நயன்தாரா நடித்துள்ள நிலையில், அந்த படத்தின் அப்டேட்டிற்காகவும் ரசிகர்கள் வெயிட்டிங்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X