லிங்கா படத்தில் ரஜினியுடன் மீண்டும் ‘பல்லேலக்கா...’ ஆடப் போகிறாராம் நயன்தாரா

சென்னை: ரஜினியின் அடுத்த படமான லிங்காவில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமான நடிகை நயன்தாரா சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அனிமேஷன் படமான கோச்சடையான் வரும் வாரம் வெளியாகவுள்ளது. இதற்கிடையே கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடித்து வருகிறார் ரஜினி. படத்திற்கு லிங்கா எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் ரஜினி ஜோடியாக அனுஷ்கா மற்றும் இந்திப்பட நடிகை சோனாக்‌ஷி சின்கா இருவரும் நடிக்கின்றனர். இவர்கள் போக படத்தில் வரும் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட இருக்கிறாராம் நயன்தாரா.

ஒரு பாடலுக்கு மட்டும்...

ஒரு பாடலுக்கு மட்டும்...

தொடர் காதல் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் நயன்தாரா, தனது ரீ-எண்ட்ரிக்குப் பின் எந்தப் படத்திலும் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடப் போவதில்லை என அறிவித்திருந்தார்.

அடுத்த ரவுண்டு...

அடுத்த ரவுண்டு...

அவர் நாயகியாக நடித்த ராஜாராணி, ஆரம்பம், நீ எங்கே என் அன்பே போன்ற படங்கள் வெற்றிகரமாக ஓடி அவரது சம்பளத்தை மேலும் உயர்த்தியுள்ளது. தற்போது சிம்பு ஜோடியாக ‘இது நம்ம ஆளு', உதயநிதி கோடியாக ‘நண்பேண்டா' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

விலக்கு...

விலக்கு...

இதற்கிடையே ரஜினியின் லிங்கா படத்திற்காக மட்டும் தனது கொள்கைகளை சற்று விலக்கி வைத்துள்ளாராம் நயன்.

இது 4வது படம்...

இது 4வது படம்...

ஏற்கனவே, ரஜினியுடன் ‘சந்திரமுகி' படத்தில் ஜோடியாக நடித்திருந்தார் நயன்தாரா. அதன்பிறகு ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ‘சிவாஜி' படத்தில் ரஜினியுடன் இணைந்து ஒரேயொரு பாடலுக்கு நடனமாடினார். பின்னர், ரஜினி நடிகராக நடித்த ‘குசேலன்' படத்தில் நடிகையாக நடித்திருந்தார்.

கோரிக்கைக்கு சம்மதம்...

கோரிக்கைக்கு சம்மதம்...

இந்நிலையில், லிங்கா படத்தில் ரஜினியின் அறிமுகப் பாடலுக்கு நயன்தாரா நடனமாடினால் நன்றாக இருக்கும் என அவர் முன் கோரிக்கை வைக்கப் பட்டதாம். ரஜினி படம் என்பதால் நயன் உடனடியாக ஓகே சொல்லி விட்டதாகக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X