நயன்தாரா கையில் பச்சைக் குத்திய பிரபு தேவா பெயரை அழிக்க ஆபரேஷன்

By Shankar

தன் முன்னாள் காதலன் பிரபு தேவா பெயரை கையில் பச்சைக் குத்திக் கொண்டிருக்கும் நயன்தாரா, அதனை அழிக்க அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளப் போகிறாராம்.

பிரபு தேவாவைக் காதலித்த போது, அவர் மீதான அன்பைக் காட்ட, அவர் பெயரை இடது கையில் 'பிரபு' என்று பச்சை குத்திக் கொண்டார்.

எல்லோரும் பார்க்கும் வகையில் தமிழில் அந்தப் பெயரை பச்சை குத்தியிருந்தார்.

Nayanthara decides to remove 'Prabhu' tattoo!

அவர் நடித்த சில படங்களிலும், பொது இடங்களிலும் அந்த 'பச்சை'யை பச்சையாகப் பார்க்க முடிந்தது.

தடாலென ஒரு நாள் இருவருக்கும் காதல் முறிந்தது. இப்போது மீண்டும் படங்களில் படு பிசியாக இருக்கும் நயன்தாராவுக்கு, பிரபு என்ற அந்தப் பச்சை பெரும் இம்சையாக இருக்கிறதாம்.

இயக்குநர்கள் தயங்கித் தயங்கி, மேடம் அந்த பச்சையைக் கொஞ்சம் மறைச்சா நல்லது என்று சொல்கிறார்களாம். ஆரம்பத்தில் இந்தப் பச்சையை பக்கா மேக்கப் மூலம் மறைத்து வந்தவர், இப்போது அதை நிரந்தரமாகவே அழித்துவிட முடிவு செய்துவிட்டார்.

லேசர் சிகிச்சை மூலம் அந்தப் பச்சையை அகற்ற மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். சூர்யா படம் தொடங்கும்போது, நயன்தாரா கையிலிருந்து பிரபு பச்சை காணாமல் போயிருக்குமாம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X