»   »  நயன்தாரா படமாக மாறிய அதர்வா படம்!

நயன்தாரா படமாக மாறிய அதர்வா படம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டிமாண்டி காலனி படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நேரத்தில் அந்த பட இயக்குநர் அஜய் ஞானமுத்துவை அழைத்து கதை கேட்டவர் அதர்வா.

கதை பிடித்துப்போக அடுத்த கட்ட நகர்வுகள் நடந்தன. படத்தின் ஒரு முக்கிய கேரக்டர் துப்பறியும் போலீஸ் கேரக்டர். அதில் நடிக்க வைக்க பிரபுதேவா உள்ளிட்ட முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடந்தது.

Nayanthara dominates in Imaikkatha Nodigal

ஒரு கட்டத்தில் அந்த கேரக்டரில் நடிக்க இப்போது நயன்தாராவை அணுகி ஒப்பந்தமும் செய்துவிட்டார்கள். நயன்தாராவுக்கு இதில் ஆக்‌ஷன் வேடம். தனியாக சண்டை பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார்.

அதர்வா படமாக இருந்த இமைக்காத நொடிகள் இப்போது நயன்தாரா படமாக மாறிவிட்டது. போகிற போக்கை பார்த்தால் நயன் தாரா நடிக்கும் என்றுதான் விளம்பரமே கொடுப்பார்கள் போல...!

English summary
Nayanthara's role is dominating Adharva in Imaikka Nodigal

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil