தெலுங்கு படத்துக்கு வான்டட்டாக புரொமோஷன் செய்த நயன்தாரா.. தமிழ் தயாரிப்பாளர்கள் நிலைமை பாவம்!
சென்னை: தெலுங்கில் இந்த சங்கராந்திக்கு பிரபாஸின் 'தி ராஜாசாப்' மற்றும் சிரஞ்சீவியின் 'மன சங்கர் வரபிரசாத் காரு' திரைப்படம் வெளியாகிறது. தமிழில் விஜய்யின் ஜன நாயகன் மற்றும் சிவகார்த்திகேயனின் பராசக்தி உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன.
பொதுவாகவே தமிழ் படங்களில் நடிப்பதோடு மட்டுமே நயன்தாரா நிறுத்திக்கொள்கிறார். பெரிதாக புரொமோஷனுக்கு எல்லாம் வருவதில்லை. தனது தயாரிப்பில் வெளியாகும் படங்களுக்கும் சில நெருங்கிய சினிமா நண்பர்கள் படங்களுக்கு மட்டுமே புரொமோஷன் செய்து வருகிறார்.

இந்நிலையில், தெலுங்கில் சிரஞ்சீவி படத்துக்கு நயன்தாராவே புரொமோஷன் பண்ணலையா எனக் கேட்டு அதையே ஒரு புரொமோஷன் வீடியோவாக வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.
அனில் ரவிப்புடிக்குனா ஓகே: தமிழ் தயாரிப்பாளர்கள் சம்பளம் கொடுப்பதற்கு நடித்து மட்டும் தான் கொடுக்க முடியும் என்றும் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிக்கு எல்லாம் வர முடியாது என அஜித் ரூட்டில் நடிகை நயன்தாரா பல வருடங்கள் பல நிகழ்ச்சிகளை தவிர்த்தது ஏகப்பட்ட தயாரிப்பாளர்களை கஷ்டத்தில் ஆழ்த்தின. இந்நிலையில், இயக்குநர் அனில் ரவிப்புடிக்குனா ஓகே சொல்லி நயன்தாரா சிரஞ்சீவி படத்துக்கான புரொமோஷனை செய்துள்ளது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அனில் ரவிப்புடி இயக்கத்தில் தான் முன்னதாக பகவந்த் கேசரி படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆனது. பாலகிருஷ்ணாவுக்கும் தேசிய விருது கிடைத்தது.

வான்டட்டாக வந்து புரொமோஷன்: சங்கராந்தி வரப்போகிறது, படம் வெளியாக இன்னும் சில நாட்களே இல்லை. இன்னும் எதுவும் புரொமோஷன் செய்யவில்லையா என இயக்குநர் அனில் ரவிப்புடியை பார்த்து நடிகை நயன்தாரா கேட்க, அவரே ஷாக்காகி, நயன்தாராவே புரொமோஷன் பண்ண சொல்லி கேட்டால், அது பெத்த புரொமோஷன் என சொல்லிவிட்டு, எதுவுமே வேண்டாம் படம் ஜனவரி 12ம் தேதி வெளியாகிறது என்று மட்டும் சொல்லுங்கள் என்கிறார். நயன்தாராவும் அதை சொல்லும் வீடியோ தான் தற்போது சோஷியல் மீடியாவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கண்டிப்பாக மூக்குத்தி அம்மன் 2 படத்துக்கு நயன்தாரா புரொமோஷன் செய்வார் என்றும் கூறுகின்றனர்.
சிரஞ்சீவிக்கு வெற்றி கிடைக்குமா?: தொடர்ந்து சிரஞ்சீவி நடிப்பில் வெளியாகி வரும் படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை. அதுவும் இந்த பொங்கலுக்கு பிரபாஸின் தி ராஜாசாப் படம் வேறு வெளியாக உள்ள நிலையில், மன சங்கர வரபிரசாத் காரு படம் என்ன ஆகும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், அனில் ரவிப்புடி மீது ரசிகர்களுக்கு நம்பிக்கை அதிகம் உள்ள நிலையில், நிச்சயம் ஃபேமிலி எண்டர்டெயினர் படத்தை கொடுப்பார் என்கின்றனர். ஜனவரி 9ம் தேதி பிரபாஸ் படம் வெளியாகும் நிலையில், ஜனவரி 12ம் தேதி தான் சிரஞ்சீவி படமே டோலிவுட்டில் வெளியாகிறது என்பது கூடுதல் தகவல்.


Click it and Unblock the Notifications











