»   »  கைதட்டி உற்சாகப்படுத்தும் நயன்தாரா!

கைதட்டி உற்சாகப்படுத்தும் நயன்தாரா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இப்போது தமிழில் முன்னணி ஹீரோக்களுக்கு இணையான மார்க்கெட்டை பிடித்துவிட்டார் நயன்தாரா. இளம் நடிகர்களே நயன்தாராவுடன் நடிக்க ஏங்குகின்றனர். காரணம் அவரது அழகு மட்டுமல்ல மார்க்கெட்டும்தான்.

அறிமுகமானபோது நயன் ஒரு வாய்த்துடுக்கு பெண்ணாகத்தான் இருந்தார். இடையில் நடந்த காதல், பிரிவுகள் எல்லாம் அவரை அப்படியே மாற்றிவிட்டன. முக்கியமாக பிரபுதேவாவுடனான பிரிவுக்கு பின் மூடி டைப் ஆளாகவே மாறினார். படப்பிடிப்பில் கூட நடித்து முடித்துவிட்டு மானிட்டர் கூட பார்க்காமல் கேரவன் பக்கம் போய்விடுவார். சக நடிகர்கள், நடிகைகளே அவரை நெருங்க பயப்படுவார்கள்.

Nayanthara encourages her co stars in sets

ஆனால் இப்போது அப்படி இல்லை. நயன்தாராவின் கேரக்டரில் இப்போது ஏகப்பட்ட மாற்றங்களாம். படப்பிடிப்பில் எல்லோருடனும் கலகலப்பாக பேசுகிறாராம்.

தன்னுடைய ஷாட் முடிந்தாலும் கேரவனுக்குள் சென்று முடங்கி விடாமல் சக நடிக, நடிகைகள் நடிக்கும்போது கைதட்டி உற்சாகப்படுத்துகிறாராம்.

திருமணமாக போகும் பெண்ணுக்கே உரிய உற்சாகம் அவரது முகத்திலும் நடத்தையிலும் தெரிகிறது என்கிறார்கள்.

English summary
Nowadays Nayanthara is looking very energetic and encouraging her co stars in shooting.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X