Nayanthara: சல்மான் கான் பட பூஜையில் செம கெத்தாக கலந்துக் கொண்ட நயன்தாரா.. வெளியான செம வீடியோ!

மும்பை: பாலிவுட்டில் ஒரு பக்கம் ராஷ்மிகா மந்தனா அசத்திக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் நானும் வரேன் என ரவுண்டு கட்டி ஆட ஆரம்பித்து விட்டார் நடிகை நயன்தாரா. தமிழில் சுந்தர். சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 மற்றும் கவின் உடன் இணைந்து நடிக்கும் ஹாய் உள்ளிட்ட படங்கள் கைவசம் உள்ள நிலையில், அடுத்ததாக சல்மான் கான் படத்திலும் நடிக்க ஆரம்பித்துள்ளார் நயன்தாரா.

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், அஜித், விஜய், சிவகார்த்திகேயன், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பிசியாக நடித்துக் கொண்டிருந்த நயன்தாராவை அவரது திருமணத்துக்குப் பிறகு எந்தவொரு முன்னணி நடிகரும் ஹீரோயினாக கமிட் செய்வதில்லையே ஏன் என்கிற கேள்விகளும் அடிக்கடி எழத்தான் செய்கின்றன.

Nayanthara enters in a swag and style at Salman Khan movie pooja video goes trending

ஆனால், அவர் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தெலுகில் சிரஞ்சீவி, மலையாளத்தில் மோகன்லால், மம்மூட்டி, கன்னடத்தில் யஷ், இந்தியில் ஷாருக்கானை தொடர்ந்து தற்போது சல்மான் கான் என டாப் கியரில் சென்றுக் கொண்டு தான் இருக்கிறார்.

அறிமுகமே ஷாருக்கான் படத்தில்: அட்லி இயக்குநராக அறிமுகமான ராஜ ராணி படத்தில் நயன்தாரா நடித்த நிலையில், அந்த படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. விஜய், நயன்தாராவை வைத்து பிகில் படத்தை இயக்கிய அட்லி ஷாருக்கானை வைத்து இயக்கிய ஜவான் படத்திலும் நயன்தாராவை பாலிவுட்டில் அறிமுகப்படுத்தினார். இந்தியில் நயன்தாரா நடித்த முதல் படமே 1000 கோடி வசூலை கடந்தது.

சல்மான் கான் பட பூஜையில்: ஷாருக்கானை தொடர்ந்து சல்மான் கான் படத்தில் நயன்தாரா ஒப்பந்தமாகி உள்ளார். ஏற்கனவே சிரஞ்சீவி நடித்த காட் ஃபாதர் படத்தில் நயன்தாரா நடித்திருந்தார். அந்த படத்தில் சல்மான் கான் கேமியோ ரோலில் நடித்திருந்தார். வாரிசு பட இயக்குநர் வம்சி இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் படத்தின் பூஜை மும்பையில் நடைபெற்ற நிலையில், செம கெத்தாக காரில் இருந்து வந்து இறங்கி கேரவனுக்குள் நயன்தாரா செல்லும் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

நயன்தாரா ராசி கை கொடுக்குமா?: இந்த ஆண்டு சிரஞ்சீவியுடன் நயன்தாரா நடித்த மன சங்கர வரபிரசாத் காரு திரைப்படம் 300 கோடி வசூலை ஈட்டியது. ஷாருக்கான் படமும் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் சாதனையை படைத்தது. யஷ் நடித்துள்ள டாக்ஸிக் படமும் வெளியானால் பாக்ஸ் ஆபீஸ் தெறிக்கும். இந்நிலையில், நயன்தாராவின் ராசி சல்மான் கானுக்கு கைகொடுக்குமா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

ராஷ்மிகா செட் ஆகல: கடைசியாக விஜய்யை வைத்து வம்சி இயக்கிய வாரிசு படத்திலும் ராஷ்மிகா மந்தனா தான் ஹீரோயின். அதே போல சல்மான் கான் நடித்த சிக்கந்தர் படத்திலும் ராஷ்மிகா தான் ஹீரோயின். ஆனால், இருவருக்கும் ராஷ்மிகா மந்தனா செட் ஆகாத நிலையில், நயன்தாராவை நாடியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X