ரத்தம் சொட்ட சொட்ட காது குத்திக் கொண்ட நயன்! கணவர் எழுதிய பாடலைப் பாடி க்யூட் ரியாக்‌ஷன்- வீடியோ!

துபாய்: தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்றால் அதன் நயன்தாரா தான். இவர் தற்போது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் தனது இரண்டு குழந்தைகளுடன் துபாய்க்குச் சென்றுள்ளார். அங்கு நடந்த சைமா விருதுகள் 2024 விழாவில் கலந்து கொண்ட அவர்கள், இன்னும் இந்தியாவுக்குத் திரும்பவில்லை. அங்கு ட்ரிப் அடித்துக் கொண்டு இருக்கும் அவர்கள் அங்கு எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தினமும் தங்களது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் இருவரும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நயன்தாரா தனது இன்ஸ்டாகிராமில் தான் காது குத்திக் கொண்ட வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகின்றது.

நயன்தாரா தமிழ் சினிமா மட்டுமல்லாமல் மலையாளம் கன்னடம் தெலுங்கு என தான் கால் வைத்த இடங்களில் எல்லாம் முத்திரை பதித்து வருகிறார். ஹிந்தியில் இவர் ஷாருக் கானுக்கு ஜோடியாக நடித்த அட்லி இயக்கிய ஜவான் திரைப்படம் சக்கை போடு போட்டது மட்டுமல்லாமல் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலை அள்ளி குவித்தது. நயன்தாரா நடிப்பில் தமிழில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் அன்னபூரணி இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ஓரளவுக்கு வசூல் செய்தது. ஓடிடியில் வெளியாகி படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

nayanthara nayanthara video nayanthara vignesh shivan

இந்தப் படத்தில் நடித்தற்காக அவருக்கு, 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான சைமா விருது வழங்கப்பட்டது. அதேபோல் கடந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வெளியான, ஜெயிலர் படத்தில் ரத்தமாரே பாடலை விக்னேஷ் சிவன் எழுதியிருந்தார். அவருக்கும் சிறந்த பாடலாசிரியருக்கான சைமா விருது கொடுக்கப்பட்டது.

முத்தம்: சைமா விருதுகள் 2024 நிகழ்ச்சியில் நயன்தாராவுக்கு விருது வழங்கப்பட்ட பின்னர் மேடைக்குச் சென்ற விக்னேஷ் சிவன், நயனுக்காக தனது படத்தில் இடம் பெற்றுள்ள பாடலான, கண்ணான கண்ணே பாடலை பாடினார். அதில் கண்ணான கண்ணே நீ கலங்காதடி என்ற வரிகளை விக்னேஷ் சிவன் பாடப் பாட நயன்தாரா அழுதார். உடனே நயனைக் கட்டிப்பிடித்த விக்னேஷ் சிவன் அவரது நெற்றியில் முத்தம் வைத்தார். இந்தக் காட்சிகள் பார்ப்பதற்கு மிகவும் ரொமாண்ட்டிக்காக இருந்தது. இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது.

ரசிகர்கள்: விருது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்ற நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி இன்னும் இந்தியாவுக்கு திரும்பவில்லை. அங்கேயே நாட்களை செலவழித்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்னர், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதேபோல் தனது குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட புகைபடத்தையும் பகிர்ந்தார். இதற்கு ரசிகர்கள் லைக்குகளை இப்போதுவரை வாரி வழங்கி வருகின்றனர்.

வீடியோ: இந்நிலையில், நயன் தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், தான் காது குத்திக் கொள்கின்றார். காது குத்தும் கடைக்குச் செல்லும் நயன், அங்கு தனக்குப் பிடித்த தோடை தேர்வு செய்கின்றார். அதன் பின்னர் அங்கிருக்கும் ஊழியர்கள், நயனுகு அந்த தோடை குத்தி விடுகின்றனர். இப்படியான நிலையில், நயனுக்கு காதில் இருந்து ரத்தம் வருகின்றது. அப்போது, விக்னேஷ் சிவன் எழுதிய ரத்தமாறே பாடலைப் பாடி க்யூட்டான ரியாக்‌ஷன் கொடுக்கின்றார். நயன் தனது வலது காதில் இரண்டு தோடுகள் குத்தியுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர். மேலும் அந்த வீடியோவுக்கு நயன் காதுமா என கேப்ஷன் இட்டுள்ளார். காதுமா என்பது நானும் ரவுடிதான் படத்தில் நயன் ஏற்று நடித்த காதம்பரி கதாபாத்திரத்தின் செல்லப்பெயர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X