பிரபுதேவா இருக்கும் பாலிவுட் போக நயன்தாரா திட்டம்?
சென்னை: நயன்தாரா பாலிவுட் படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளாராம்.
நயன்தாரா பாலகிருஷ்ணாவுடன் சேர்ந்து நடித்த தெலுங்கு படம் ஸ்ரீராம ராஜ்ஜியம். இந்த படத்தில் நயன் சீதையாக நடித்தார். தற்போது இப்படத்தை இந்தியில் டப் செய்திருக்கிறார்கள். அண்மையில் மும்பையில் நடந்த பிரீமியர் ஷோவைப் பார்த்துவிட்டு அங்குள்ள பல பிரபலங்கள் நயனின் நடிப்பு சூப்பா் என்று பாராட்டியுள்ளனர்.
இதனால் குஷியில் இருக்கும் அவர் இப்படம் மட்டும் ஹிட்டானால் பாலிவுட் படத்தில் நடிக்கவும் ஆர்வமாக உள்ளாராம். பாலிவுட்டில் ரீமேக் மன்னனாக இருக்கும் நயனின் முன்னாள் காதலர் பிரபுதேவா இதைக் கேட்டு என்ன செய்யப் போகிறாரோ தெரியவில்லையே. நயனைப் பிரிந்த பிறகு அவர் மும்பையில் செட்டிலானார். இப்பொழுது என்னவென்றால் நயனுக்கும் மும்பை போகும் ஆசை வந்துவிட்டது.
அது என்னமோ தெரியவில்லை கோலிவுட், டோலிவுட் நடிகைகளில் சிலருக்கு இப்போது பாலிவுட் ஆசை வந்துவிட்டது.
Comments


Click it and Unblock the Notifications
