விக்னேஷ் சிவனுக்கு ஒரேயொரு கோரிக்கை விடுத்த நயன் ரசிகர்கள்: நிறைவேற்றுவாரா?
Recommended Video

சென்னை: விக்னேஷ் சிவனிடம் நயன்தாரா ரசிகர்கள் ஒரேயொரு கோரிக்கை விடுத்துள்ளனர்.
லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா நேற்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து நேற்றைய நாளை ஸ்பெஷலாக்கினார்கள்.
நயன்தாரா தனது பிறந்தநாளை காதலர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடினார்.

விக்னேஷ் சிவன்
நயன்தாராவுக்காக விக்னேஷ் சிவன் ஸ்பெஷலாக கேக் ஆர்டர் செய்து, வீட்டை அலங்கரித்து அசத்தியுள்ளார். கேக் வெட்டியபோது எடுத்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த நயன்தாரா ரசிகர்கள் அவரிடம் ஒரேயொரு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருமணம்
தலைவி வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை அனுபவித்துவிட்டார். செல்லத்தை கைவிட்டுவிடாதீர்கள் விக்னேஷ் சிவன். சீக்கிரமாக திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று நயன்தாரா ரசிகர்கள் விக்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

படங்கள்
படங்களில் ஹீரோக்களுக்கு இணையான கதாபாத்திரங்களில் மிரட்டும் நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இருக்கும்போது மட்டும் சாதாரண பெண் போன்று வெட்கப்படுகிறார். பிறந்தநாள் புகைப்படத்தில் நயன்தாரா மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது தெரிகிறது. அவர் முகத்தில் தனி அழகு தெரிகிறது. அதனால் நயனுக்கு ஏற்ற நபர் விக்கி தான் என்று ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்.

எதிர்பார்ப்பு
நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் இந்த ஆண்டே திருமணம் செய்து கொள்வார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் 2018ம் ஆண்டு நிறைவடையப் போகிறது. அடுத்த ஆண்டாவது அவர்களின் திருமணம் நடக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம். இதை நிறைவேற்றி வைப்பாரா விக்னேஷ் சிவன்?


Click it and Unblock the Notifications











